கேப்டனாக போஸ் கொடுக்க போன ஹர்திக்.. அடுத்த நொடியே வில்லியம்சன் செஞ்ச அற்புதம்.. இணையத்தை கலக்கும் வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவில் வைத்து 8 வது டி20 உலக கோப்பை சமீபத்தில் நடந்து முடிந்திருந்த நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக டி 20 கோப்பையை கைப்பற்றி இருந்தது.
Also Read | காட்டில் காணாம போன 'நபர்'.. "எங்க தேடியும் கெடக்கலையாம்".. கடைசியில் செல்ல நாய் செய்த நெகிழ்ச்சி காரியம்!!
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. இதில், பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது இங்கிலாந்து அணி. இரண்டாவது முறையாக டி 20 உலக கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ள இங்கிலாந்து அணி, நடப்பு ஒரு நாள் உலக கோப்பையின் சாம்பியனாகவும் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி 20 உலக கோப்பை தொடரில் பலம் வாய்ந்த அணியாகவும் திகழ்ந்தது. நிச்சயம் உலக கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாகவும் கருதப்பட்டு வந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறியதால் ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர். அடுத்து வரும் உலக கோப்பை தொடர்களில் நிச்சயம் இந்திய அணி வென்று தங்களது திறனை நிரூபிக்கும் என்ற நம்பிக்கையுடனும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தும் வந்தனர்.
டி20 உலக கோப்பைத் தொடரை முடித்துள்ள இந்திய அணி, அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஒருநாள் போட்டி தொடரில் விளையாட உள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பயிற்சயாளராக டிராவிட்டிற்கு பதிலாக லக்ஷ்மண் செயல்பட உள்ளார். டி20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியாவும் ஒரு நாள் தொடரில் ஷிகர் தவானும் தலைமை தாங்க உள்ளனர்.
இதற்கான இந்திய அணியும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதலாவதாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே டி 20 தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் டி 20 போட்டி, நவம்பர் 18 ஆம் தேதி நியூசிலாந்தின் வெலிங்டனில் வைத்து நடைபெற உள்ளது.
இந்த நிலையில், டி 20 தொடர் ஆரம்பமாவதற்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோர் எப்போதும் போல கோப்பை அறிமுக விழாவில் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் கோப்பையுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில் பலத்த காற்று வீசியது.
இதன் காரணமாக, கோப்பை வைக்கப்பட்டிருந்த அட்டை காற்றில் சரிந்த நிலையில், அதன் மீது இருந்த கோப்பையும் சரியத் தொடங்கியது. இதனைக் கண்டதும் உடனடியாக சுதாரித்துக் கொண்ட நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கோப்பையை அற்புதமாக பிடித்துக் கொண்டார்.
மேலும் வில்லியம்சன் கோப்பையை பிடித்த கையோடு கோப்பை எங்களுக்கு தான் என்பது போலவும் பாண்டியாவிடம் புன்னகையுடன் தெரிவித்தார். இதற்கு பாண்டியாவும் பதிலுக்கு புன்னகைக்க, இது தொடர்பான வீடியோவை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. காற்றில் சரிய போன கோப்பையை மிகவும் அசத்தலாக கேன் வில்லியம்சன் பிடித்தது தொடர்பான வீடியோ, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
Also Read | "கேரளா, டெல்லி".. 2 கொலைகள்.. இரண்டுக்கும் நடுவே இருந்த ஒற்றுமைகள்??... பீதியை ஏற்படுத்தும் பின்னணி!!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இனிமே அப்டி இருக்காது".. Retire ஆன பொல்லார்ட்.. CSK போட்ட நெகிழ்ச்சி கமெண்ட்!!
- ரங்கன் வாத்தியார் - கபிலனாக மாறிய தோனி, ஜடேஜா.. CSK அணி பகிர்ந்த மாஸான வீடியோ.. ஜடேஜா போட்ட தெறி கமெண்ட்..!
- "MI லெஜெண்ட்".. ஓய்வை அறிவித்த பொல்லார்டு.. ரோஹித் ஷர்மாவின் உருக்கமான போஸ்ட்.. கண்கலங்கிய ரசிகர்கள்..!
- லிஸ்ட் வெளியானதும் ஜடேஜா பகிர்ந்த ட்வீட்.. அந்த 3 வார்த்தை கேப்ஷன் தான் 'செம' வைரல்!! IPL 2023
- "ஜடேஜா உள்ள, பிராவோ வெளிய".. சிஎஸ்கே அணி வெளியிட்ட அதிகாரப்பூர்வ லிஸ்ட்.. வேற யாரெல்லாம் இருக்காங்க?.. IPL 2023
- ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த பொல்லார்ட்.. மும்பை அணிக்காக புது ரூட்டில் கொடுக்க போகும் என்ட்ரி!!
- அந்த மனசுதான் சார்.. மொயீன் அலி மற்றும் ஆதில் ரஷீதுக்காக இங்கிலாந்து அணி செஞ்ச விஷயம்.. ஹார்ட்டின்களை அள்ளும் வீடியோ..!
- முகமது ஷமியின் 'கர்மா' கமெண்ட்.. அக்தர் போட்ட ரிப்ளை.. ட்விட்டரில் வலுக்கும் விவாதம்..!
- "தோனி சொல்லியும் யாரும் கேக்கல".. கடைசி ஓவர் முன்னாடி நடந்தது என்ன??.. வைரலாகும் சோயிப் மாலிக் கருத்து.. T 20 World Cup 2007!!
- MS DHONI: இது தோனி லேட்டஸ்ட்.. "எங்கு தொடங்கும் எங்கு முடியும்".. வெந்து தணிந்தது காடு படத்தின் தீம் பாடலுடன் CSK நிர்வாகம் வெளியிட்ட வீடியோ!