'உண்மையிலே நான் ரொம்ப வருத்தப்பட்டேன்...' 'நடந்துருக்கணும்'னு எனக்கும் 'ஆசையா' தான் இருந்துச்சு... பட் என்ன பண்றது...? - கேன் வில்லியம்சன் வேதனை...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த செப்டம்பர் மாதம் நியூசிலாந்து அணி ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவதற்கு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்நிலையில் நாளை போட்டி தொடங்குகிறது என்றால் இன்று பாகிஸ்தானில் நியூசிலாந்து அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கோரி கிரிக்கெட் தொடரை ரத்து செய்தது.

Advertising
>
Advertising

இதனை ஏற்றுக்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அடுத்த நாளே நியூசிலாந்து அணி தனது சொந்த நாட்டிற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வழியனுப்பி வைத்தது. இந்த சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பெருத்த நஷ்டத்தையும், பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சோகத்தையும், பாகிஸ்தான் அணிக்கு இது மிகுந்த மனச்சோர்வையும் ஏற்படுத்தியதாக பாகிஸ்தான் அணியின் புதிய பிரசிடன்டாக தேர்வுசெய்யப்பட்ட ரமீஷ் ராஜா தெரிவித்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டுடன் கிரிக்கெட் தொடர் விளையாடமல் போனது குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின்போது பேசியுள்ளார்.

அதில், 'செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் தொடர் விளையாடமல் போனது மிகவும் வருத்தமளிக்கிறது. நாங்கள் மிகவும் ஆர்வமாக இருந்தோம். ஆனால், சூழல் கைக்கூடவில்லை.

பாகிஸ்தான் அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர். இந்தியாவுக்கு எதிராக ஆடிய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி மிக பிரமாதமாக விளையாடியது. எங்களுடைய முழு கவனமும் உலகக் கோப்பை தொடரின் மீதுதான் உள்ளது' என கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்