‘கடைசி நாள் ஆட்டத்தில் நடந்த திருப்புமுனை’.. அஸ்வின் சுழலில் இருந்து தப்பியது எப்படி..? வில்லியம்சன் சொன்ன சீக்ரெட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வின் ஓவரில் அவுட்டில் இருந்து தப்பியது குறித்து கேன் வில்லியம்சன் பகிர்ந்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் முதல்முறையாக நியூஸிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது. இதனால் அந்த அணிக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது நாடு திரும்பியுள்ள நியூஸிலாந்து வீரர்கள், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடிய அனுபவம் குறித்து பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், கடைசி நாள் ஆட்டத்தில் அஸ்வின் ஓவரில் அவுட்டாக இருந்ததில் இருந்து தப்பியது குறித்து பகிர்ந்துள்ளார். அதில், ‘அஸ்வின் ஓவரில் எனக்கு எல்பிடபுள்யூ அவுட் கொடுக்கப்பட்டது. முதலில் எனக்கும் அது அவுட் என்றுதான் தோன்றியது. ஏனென்றால் பந்து அந்த அளவிற்கு நெருக்கமாக வந்தது. ஆனால் அஸ்வின் எப்படி பந்தை ஸ்பின் செய்வார் என்று எனக்கு தெரியும். அதனால் எனக்கு ஒரு வாய்ப்பு இருக்கும் என்று நினைத்தே ரிவியூ கேட்டேன்’ என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது இன்னிங்ஸின் கடைசி நாள் ஆட்டத்தில் 139 ரன்களை நியூஸிலாந்துக்கு வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. அப்போது களமிறங்கிய நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஓவர் அவுட்டானார். இதனால் அந்த அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் கேப்டன் கேன் வில்லியம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அதனால் இவரது விக்கெட் இந்தியாவுக்கு முக்கியமாக பார்க்கப்பட்டது.

அப்போது அஸ்வின் வீசிய ஓவரில் கேன் வில்லியம்சனுக்கு எல்பிடபுள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டது. உடனே அம்பயரின் முடிவை எதிர்த்து வில்லியம்சன் ரிவியூ கேட்டார். அதில் நாட் அவுட் என முடிவு வந்தது. இதனால் அவுட்டில் இருந்து அவர் தப்பினார். இது நியூஸிலாந்து அணிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதனை அடுத்து 52 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வில்லியம்சன் அசத்தினார். இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்