'ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில்’... ‘டபுள் செஞ்சுரி அடிச்சதால்’... ‘விராட் கோலியின் 2-வது இடத்தில் இணைந்த’... ‘மற்றொரு நாட்டு அணியின் கேப்டன்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 2-வது இடத்தில் இருக்கும் நிலையில் அவருடன் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்ஸனும் இணைந்தார்.

நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஹாமில்டனில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் இரட்டை சதம் அடித்ததுடன் 251 ரன்கள் விளாசினார். இரட்டை சதம் அடித்ததன் மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 74 புள்ளிகள் பெற்று 812 புள்ளிகளில் இருந்து 886 ரன்களுக்கு முன்னேறினார்.

இதன் மூலம் ஐசிசி தரவரிசையில் 2-வது இடத்தை விராட் கோலியுடன் பகிர்ந்துள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வில்லியம்ஸன் சதம் அடித்தாலோ அல்லது அரை சதம் அடித்தாலோ நிச்சயம் கோலியை முந்திவிடுவார். அதேசமயம், ஆஸ்திரேலிய அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது.

இதில் கோலி முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடுவார். அடுத்த 3 போட்டிகளில் விளையாடமாட்டார். ஆதலால், இந்த ஒரு போட்டியில் கோலி தனது தரவரிசையை உயர்த்த சதம் அடித்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், தரவரிசையில் பின்னடைவைச் சந்திக்க நேரலாம்.

ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இந்திய அணியின் துணைக் கேப்டன் ரஹானே 11-வது இடத்திலும், மயங்க் அகர்வால் 12-வது இடத்துக்கும் சரிந்துள்ளனர். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டும் உள்ளார். ஜஸ்பிரித் பும்ரா 779 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளார். அஸ்வின் 11-வது இடத்தில் உள்ளார்.

ஷமி 13-வது இடத்திலும், இசாந்த் சர்மா 17-வது இடத்திலும், ஜடேஜா 18-வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பேட் கம்மின்ஸ் 904 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர் தரவரிசையில் இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா 3-வது இடத்திலும், அஸ்வின் 6-வது இடத்திலும் உள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்