"'கிரிக்கெட்'டோட 'ஜென்டில்' மேன் நீங்க தான்..." 'வில்லியம்சன்' செய்த காரியத்தால்,,.. சிலிர்த்து போன ரசிகர்கள்... இதயங்களை வென்ற 'புகைப்படம்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு'கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு' என்றொரு செயலுண்டு. அதற்கேற்ப, அமைந்த நியூசிலாந்து அணி கேப்டன் கனே வில்லியம்சனின் செயல் ஒன்று தற்போது ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமானது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், அதன்படி பேட்டிங் இறங்கிய நியூசிலாந்து அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர் டாம் லதாம் 86 ரன்கள் எடுத்து அவுட்டான நிலையில், கேப்டன் கனே வில்லியம்சன் 97 ரன்களுடனும், ராஸ் டெய்லர் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரரான கெமர் ரோச்சின் தந்தை சமீபத்தில் மரணமடைந்தார். இதன் காரணமாக, இரு அணி வீரர்களும் கையில் கருப்பு பேண்ட் ஒன்றை அணிந்து கொண்டு போட்டியில் பங்கேற்றனர்.
அதே போல, நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், கெமர் ரோச்சிற்கு ஆறுதல் சொல்லும் வகையில் அவரை கட்டித் தழுவி தேற்றிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. வில்லியம்சனின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா' கண்ணுக்கு முன்னாடி வந்து போகுமா இல்லையா'... 'ஆரோன் பின்ச்' செஞ்ச சேட்டை!
- மூன்றே நாட்களில் முடிந்த 'டெஸ்ட்' ... 'எட்டு' வருடங்களுக்குப் பிறகு ... 'நம்பர் 1' அணியின் மோசமான 'நிலை' !
- 'எல்லா விதமான கிரிக்கெட்டிலும்'... 'இவர்தான் தலைச் சிறந்த வீரர்'... 'இந்திய வீரரை புகழ்ந்த நியூசிலாந்து கேப்டன்'!
- 'சிறந்த நியூஸிலாந்துக்காரர்' விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட, WorldCup-ல் கலக்கிய 'இங்கிலாந்து' வீரர்!
- 'தோற்றாலும்,ஜெயித்தாலும் மீசைய முறுக்கு'...'நீங்களும் கேப்டன் கூல் தான்'... வைரலாகும் வீடியோ!
- ‘உலகக்கோப்பையில் புதிய சாதனை’.. முன்னாள் இலங்கை கேப்டனை பின்னுக்கு தள்ளிய வில்லியம்சன்.!
- ‘ஹைதராபாத் அணியின் முக்கிய வீரர் திடீர் விலகல்’.. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமா சிஎஸ்கே?