VIDEO: டாஸ் போடும்போதே ‘பிராக்டீஸ்’ கொடுத்திருப்பாரு போல.. அதே மாதிரியே ‘அவுட்’ ஆன வில்லியம்சன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையேயான உலக டெஸ்ட் இறுதிப்போட்டியில், இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதில் அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், கேப்டன் விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து நியூஸிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் விளையாடியது. இதில், தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம் மற்றம் டெவன் கான்வே களமிறங்கினர். 70 ரன்கள் வரை இந்த ஜோடி வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்தது. அப்போது அஸ்வின் வீசிய 35-வது ஓவரில் டாம் லாதம் (30 ரன்கள்) அவுட்டாகினார். இதனைத் தொடர்ந்து இஷாந்த் ஷர்மா வீசிய 49-வது ஓவரில் டெவன் கான்வேயும் (54 ரன்கள்) அவுட்டாகி வெளியேறினார்.

இதனை அடுத்து நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் ஆகிய இருவரும் கூட்டணி அமைத்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அப்போது முகமது ஷமியின் ஓவரில் ராஸ் டெய்லர் (11 ரன்கள்) அவுட்டாகி வெளியேற, இவரைத் தொடர்ந்து வந்த ஹென்றி நிக்கோல்ஸ், பிஜே வாட்லிங், டி கிராண்ட்ஹோம் மற்றும் கெயில் ஜேமிசன் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர்.

இதனை அடுத்து 49 ரன்கள் எடுத்திருந்தபோது இஷாந்த் ஷர்மாவின் ஓவரில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து கேன் வில்லியம்சன் அவுட்டானார். இதனால் 249 ரன்களுக்கு நியூஸிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்களை இந்தியா எடுத்துள்ளது.

இந்த நிலையில், கேன் வில்லியம்சன் அடித்த பந்தை விராட் கோலி கேட்ச் பிடித்து அவுட்டாக்கிய வீடியோவையும், டாஸ் போட்டபோது கோலியிடம் வில்லியம்சன் மைக்கை தூக்கி வீசிய வீடியோவையும் சேர்த்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில், முன்னதாகவே கோலிக்கு வில்லியம்சன் கேட்ச் பிராக்டீஸ் கொடுத்துள்ளதாக சிலர் விளையாட்டாக குறிப்பிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்