"கவலையோட இந்தியாவை விட்டு கிளம்புறேன்".. IPL தொடரில் இருந்து விலகிய வில்லியம்சன்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார் குஜராத் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான கேன் வில்லியம்சன். இது தொடர்பாக அந்த அணி பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் போட்டிகள் டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடியது. இதில் குஜராத் வெற்றி பெற்றது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த போட்டியில் ஃபீல்டிங் செய்யும்போது எதிர்பாராத விதமாக வில்லியம்சனுக்கு முழங்காலில் காயம்பட்டது. சிக்ஸரை தவிர்க்க முயன்றபோது கீழே விழுந்ததில் காயமடைய சக வீரர்கள் அவரை டிரெஸ்ஸிங் ரூமிற்குள் தூக்கிச் சென்றனர். இதனையடுத்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. பின்னர் மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இது தொடர்பாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில்,"முழங்கால் காயம் காரணமாக கேன் வில்லியம்சன் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து விடுக்கப்பட்டதை தொடர்ந்து சிகிச்சை பெற அவர் நியூசிலாந்து திரும்புகிறார். அடுத்தவாரம் அவருக்கு சிகிச்சைகள் துவங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த சூழ்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளது. அதில் காருக்குள் அமர்ந்திருக்கும் வில்லியம்சன்,"இவ்வளவு சீக்கிரம் விடைபெறுவது கவலையளிக்கிறது. நிச்சயமாக அணியை மிஸ் செய்வேன். சீக்கிரம் சந்திக்கலாம்" என்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

 

KANE WILLIAMSON, IPL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்