புதிய கேப்டன் ஜடேஜாவுக்கு.. ஒரு காலத்துல வார்னே கொடுத்த 'Punishment'.. "மனுஷன் இவ்ளோ 'Strict'அ இருந்துருக்காரே"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே, கடந்த மார்ச் 4 ஆம் தேதியன்று, மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
நண்பர்களுடன் விடுமுறையை கழிக்க சென்றிருந்த வார்னே, திடீரென தான் தங்கியிருந்த விடுதியில் இறந்து கிடந்துள்ளார்.
52 வயதில், யாரும் எதிர்பாராத வகையில், திடீரென வார்னேவுக்கு நேர்ந்த சம்பவம், கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பல கிரிக்கெட் பிரபலங்களையும் கடும் வேதனையில் ஆழ்த்தியிருந்தது.
கம்ரான் அக்மல் சொன்ன விஷயம்
தொடர்ந்து, வார்னேவுடன் கிரிக்கெட் ஆடிய போது, நடந்த சம்பவங்கள் பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பல கருத்துக்களை உருக்கத்துடன் பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில், பாகிஸ்தான் அணி வீரர் கம்ரான் அக்மல் தெரிவித்துள்ள கருத்து ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
முதல் ஐபிஎல் கோப்பை
சுழற்பந்து வீச்சில் ஜாம்பவானான ஷேன் வார்னே, ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை முதல் சீசனில் (2008) இருந்து, 2011 ஆம் ஆண்டு வரை கேப்டனாக வழி நடத்தி இருந்தார். இதில், முதல் சீசனான 2008 ஆம் ஆண்டின் இறுதி போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றி இருந்தது.
தாமதமாக வந்த ஜடேஜா, யூசுப் பதான்
அப்போது ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள், ராஜஸ்தான் அணியில் நடந்த பல தருணங்களை பற்றி, ஒரு ஆவணப் படம் ஒன்றில், தற்போது மனம் திறந்துள்ளனர். இதில் பேசும் கம்ரான் அக்மல், "அப்போது ராஜஸ்தான் அணியில் இருந்த யூசுப் பதான் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர், பயிற்சிக்கு ஒருமுறை தாமதமாக வந்தனர். ஆனால், வார்னே எதுவும் சொல்லவில்லை. நானும் தாமதமாக தான் வந்தேன். ஆனால், அவர்களை போல தாமதமாக நான் வரவில்லை. இதனால் என்னை வார்னே ஒன்றும் செய்யவில்லை.
தண்டனை கொடுத்த வார்னே
தொடர்ந்து, பயிற்சியினை முடித்து விட்டு, மைதானத்தில் இருந்து நாங்கள் கிளம்பினோம். திரும்பி நாங்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது, பேருந்தினை நிறுத்தும் படி ஓட்டுனரிடம் கூறினார் வார்னே. பிறகு, பயிற்சிக்கு தாமதமாக வந்த யூசுப் பதான் மற்றும் ரவீந்திர ஜடேஜாவிடம், 'நீங்கள் இரண்டு பேரும் நடந்து வாருங்கள்' எனக் கூறி தண்டனையை அளித்தார் வார்னே" என கம்ரான் அக்மல் தெரிவித்தார்.
ஜடேஜாவின் சாதனைகள்
தங்களின் ஹோட்டலுக்கு செல்ல சுமார் 2 கிலோமீட்டர் வரை இருந்துள்ள நிலையில், யூசுப் பதான் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர், பயிற்சிக்கு தாமதமாக வந்ததன் பெயரில், நடந்தே சென்றுள்ளனர். முன்னதாக, வார்னே இறந்த அடுத்த சில தினங்களில், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 175 ரன்கள் அடித்து பல சாதனைகளை படைத்தார் ஜடேஜா.
புதிய கேப்டன்
'ராக்ஸ்டார்' என ஜடேஜாவை ஒருமுறை வார்னே குறிப்பிட்டிருந்த நிலையில், அவருக்கு பெருமை சேர்த்து விட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ட்வீட் செய்திருந்தது. அதே போல, சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த தோனி, அதன் பதவியில் இருந்து விலகிய நிலையில், புதிய கேப்டனாக ஜடேஜா தற்போது நியமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "வேற ரூட்'யா நீ.." 'பிகில்' விஜய்யாக மாறிய தோனி.. இப்டி ஒரு 'வீடியோ' பாத்தா கண்ணு எப்டியா கலங்காம இருக்கும்?
- “போன வருசமே இதை பத்தி பேசிட்டோம்”.. திடீர் கேப்டன்ஷி மாற்றம்.. சிஎஸ்கே சிஇஓ சொன்ன சீக்ரெட்..!
- "என்கூட அவர் இருக்கும்போது கவலையே இல்ல"..CSK கேப்டனாக அறிவிக்கப்பட்டவுடன் ஜடேஜா சொன்ன விஷயம்.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்..!
- கேப்டனை மாற்றிய CSK.. அன்றே கணித்த கவாஸ்கர்..ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!
- இது யாருமே எதிர்பார்க்காத ‘ஷாக்’.. சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து விலகிய ‘தல’ தோனி.. புது கேப்டன் யார் தெரியுமா?
- ரெய்னாவுக்கு CSK போட்ட 'ட்வீட்'.. உடனே 'சின்ன' தல போட்ட கமெண்ட்.. அப்படி என்ன விசேஷம்?
- "அப்படி எல்லாம் இருக்க வேணாம்.." ராகுலுக்கு அட்வைஸ் பண்ற கேப்'ல.. தோனியை சீண்டினாரா கம்பீர்??.. என்னங்க சொன்னாரு?
- “தோனிக்கு அப்புறம் சிஎஸ்கே கேப்டன் அவர்தான்”.. சுரேஷ் ரெய்னா சொன்ன சூப்பர் டூப்பர் தகவல்..!
- "திரும்ப வந்துட்டாருங்க அவரு.." ஐபிஎல் தொடரில் மீண்டும் வரும் ரெய்னா.. சென்னை மேட்ச் நடக்குறப்போ சும்மா களை கட்டப் போகுது..
- தோனிக்கு அப்புறம் சிஎஸ்கே கேப்டன் இவர்தான்.. மூத்த வீரரை கை காட்டும் ஆகாஷ் சோப்ரா.. வாய்ப்பு இருக்கா..?