இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முக்கிய வீரர் விலகல்?… சிகிச்சைக்காக வெளிநாடு பயணமா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய டெஸ்ட் அணியில் முக்கிய வீரர் இங்கிலாந்து தொடரில் இடம்பெறமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முக்கிய வீரர் விலகல்?… சிகிச்சைக்காக வெளிநாடு பயணமா?
Advertising
>
Advertising

Also Read | நைட்டு 10.30 மணி... கண்ணு முழிச்சு பார்த்தா ஜன்னல் வழியா கண்ட காட்சி.. பதைபதைத்து போன பெண்.!

இங்கிலாந்து டெஸ்ட்…

இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் கடந்த ஆண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது கொரோனா பரவல் காரணமாக கடைசிப் போட்டி நிறுத்தப்பட்டது. அந்த மீதமுள்ள ஒரு போட்டி இப்போது நடக்க உள்ளது. அதற்கான இந்திய அணி ரோஹித் ஷர்மா தலைமையில் தற்போது இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது.

K L Rahul Reportedly missing England test match

கே எல் ராகுல் காயம்…

சமீபத்தில், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு கேப்டனாக கே எல் ராகுல் நியமிக்கப்பட்டு இருந்தார். ஆனால்  தொடருக்கு முன்னதாக இந்திய தேசிய கிரிக்கெட் அணி கேப்டன் கே.எல்.ராகுல் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக  டி20 ஐ தொடரில் இருந்து விலகினார். இதையடுத்து காயம் குணமாகி அவர் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் டெஸ்ட் தொடரில் இருந்தும் விலகியுள்ளார்.

சிகிச்சைக்காக வெளிநாடு பயணம்…

இது சம்மந்தமாக வெளியாகும் தகவல்களில் ராகுல் சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு செல்ல உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஐபிஎல் போட்டி மற்றும் அதற்கு முந்தைய தொடர்கள் என சீராக விளையாடி வந்த ராகுல் காயத்தால் விலகி இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Also Read | 40 வருஷமா செப்டிங் டேங்கில் மனைவியின் உடலை வைத்த 89 வயது கணவர்..? பரபரப்பு சம்பவம்.!

CRICKET, KL RAHUL, ENGLAND TEST MATCH, INDIAN CRICKET TEAM, INDIA VS ENGLAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்