"இப்போதைக்கு வாய்ப்பே கிடையாது பாஸ்.." ஆசைப்பட்ட 'ஸ்டீவ் ஸ்மித்'!.. நோ சொன்ன ஆஸ்திரேலிய 'கோச்'... 'பரபரப்பு' சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரரான ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith), கடந்த 2018 ஆம் ஆண்டு கிரிக்கெட் பந்தை சேதப்படுத்தியதற்காக, கிரிக்கெட் போட்டிகள் விளையாட, அவருக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டிருந்தது.

"இப்போதைக்கு வாய்ப்பே கிடையாது பாஸ்.." ஆசைப்பட்ட 'ஸ்டீவ் ஸ்மித்'!.. நோ சொன்ன ஆஸ்திரேலிய 'கோச்'... 'பரபரப்பு' சம்பவம்!!

அது மட்டுமில்லாமல், அவரிடம் இருந்து கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டிருந்தது. ஓராண்டு தடை முடிந்து மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடி வரும் ஸ்டீவ் ஸ்மித், எந்த வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும், கேப்டனாக செயல்பட்டு வருவதில்லை.
justin langer reacts to steve smith captaincy ambition

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தற்போதைய கேப்டனாக, டிம் பெயினும், 50 ஓவர் மற்றும் டி 20 போட்டிகளின் கேப்டனாக ஆரோன் பின்ச்சும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வரும் ஸ்டீவ் ஸ்மித், ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்படுவதற்கான வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் முழு மனதுடன் ஏற்றுக் கொள்வேன் என சமீபத்தில் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
justin langer reacts to steve smith captaincy ambition

இதனால், ஸ்மித் மீண்டும் கேப்டன் ஆகப் போகிறார் என்ற தகவல்களும் ஒரு பக்கம் வலம் வர ஆரம்பித்தன. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியை மீண்டும் ஸ்மித் வழிநடத்துவது பற்றி, அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் (Justin Langer) கருத்து தெரிவித்துள்ளார்.

'ஆஸ்திரேலிய அணியை இரண்டு அற்புதமான கேப்டன்கள் தற்போது வழிநடத்தி வருகின்றனர். அதுவும் அடுத்தடுத்த நாட்களில், ஆஷஸ் தொடர் மற்றும் டி 20 உலக கோப்பையிலும் நாங்கள் பங்கேற்கவுள்ளோம். சில யூகங்களின் அடிப்படையில், ஊடகங்கள் பல தகவல்களை சொன்னாலும், ஆஸ்திரேலிய அணியில் தற்போதைக்கு கேப்டன் பதவி காலியாக இல்லை' என லாங்கர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், காயத்தால் விலகியுள்ளதால், ஸ்மித் அல்லது ரஹானே ஆகியோரில் ஒருவர் கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்த்த நிலையில், இளம் வீரர் ரிஷப் பண்ட்டை அந்த அணி நிர்வாகம் கேப்டனாக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்