16 வருட 'கிரிக்கெட்' வாழ்க்கை... முடிவுக்கு வந்தது... ஓய்வை 'அறிவித்த' அதிரடி ஆல்ரவுண்டர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக, தென் ஆப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் ஜேபி டுமினி தெரிவித்து இருக்கிறார்.

தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான டுமினி கடந்த 2017-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பைக்கு பின், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பின் டி20 போட்டிகளில் மட்டும் பங்கேற்று வந்த டுமினி தற்போது அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து டுமினி, '' கடந்த சில மாதங்களாகவே எதிர்காலம் குறித்து யோசனை செய்தேன். இது மிகவும் கடினமான முடிவு தான். ஆனால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என முடிவு செய்துள்ளேன். இன்னும் கிரிக்கெட் விளையாடி பணம் சம்பாதிக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.

அதற்காக சிபிஎல் மற்றும் கனடா லீக்கில் பங்கேற்று உள்ளேன். அங்கு சீனியர் வீரர்களை ஒதுக்க அதிகளவில் இளம்வீரர்களை தேடி வருகின்றனர். அடுத்து என்ன என்று தெரியவில்லை. ஒரு கதவு மூடும் முன்பாக அடுத்த கதவை திறக்க வேண்டும். ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்,'' என தெரிவித்து இருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்