‘கன்ஃபார்ம்.. அவரு திரும்ப வராரு’.. அப்படி போடு.. சிஎஸ்கே சிஇஓ கொடுத்த ‘சூப்பர்’ அப்டேட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கும் வெளிநாட்டு வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர், கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. அதன்படி வரும் செப்டம்பர் 19-ம் தேதியில் இருந்து போட்டிகள் தொடங்க உள்ளன. இந்த இரண்டாம் பாதியின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகள் மோதுகின்றன.

தற்போது அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் பயணித்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஐபிஎல் தொடரின் இந்த இரண்டாம் பாதியில் வெளிநாட்டு வீரர்கள் பலர் இடம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ஒவ்வொரு அணியும் மாற்று வீரர்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் இலங்கை அணியின் ஹசரங்கா, ஷமீரா மற்றும் சிங்கப்பூர் வீரர் டிம் டேவிட் ஆகியோரை பெங்களூரு அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசல்வுட் இந்த தொடரில் பங்கேற்பதை சிஎஸ்கே அணியின் சிஇஓ காசிவிஸ்வநாதன் உறுதி செய்துள்ளார். தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வேண்டும் இந்த ஐபிஎல் சீசனின் ஆரம்பத்திலேயே ஜோஷ் ஹேசல்வுட் விலகினார்.

இதனிடையே ஐபிஎல் முதல் பாதியில் விளையாடாத வீரர்கள் முழு உடற்தகுதியுடன் இருந்தால் இரண்டாம் கட்ட தொடரில் அந்தந்த அணிகளில் இணையலாம் பிசிசிஐ கூறியிருந்தது. இந்த நிலையில் ஜோஷ் ஹேசல்வுட், எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணியின் சார்பாக விளையாடுவார் என்றும், விரைவில் ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சியை மேற்கொள்வார் என்றும் சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்