"என்ன அஸ்வின், சௌக்கியமா??.." ராஜஸ்தான் அணிக்கு வரவேற்ற ஜோஸ் பட்லர்.. நடுவுல ஒன்னு சொன்னாரு பாருங்க.. அதான் ஹைலைட்டே

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் மெகா ஏலம், இரண்டாம் நாளான இன்றும், மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

துடிப்பான இளம் வீரர்கள் மற்றும் அனுபவ வீரர்களை எடுக்க, பல அணிகள் கடுமையாக போட்டி போட்டது. அந்த வகையில், முதல் நாளான நேற்று, இளம் வீரர் இஷான் கிஷான், அதிக தொகைக்கு ஏலம் போனார். அவரை, 15.25 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி, ஏலத்தில் வாங்கியிருந்தது.

அவரைத் தொடர்ந்து, வேகபபந்து வீச்சாளர் தீபக் சாஹரை சென்னை அணி, 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது. இதே போல, பல வீரர்களும் சிறந்த தொகைக்கு ஏலம் போயினர்.

ரவிச்சந்திரன் அஸ்வின்

மேலும், நேற்றைய தினத்தில், இந்திய அணியின் ஆஃப் ஸ்பின்னர், ரவிச்சந்திரன் அஸ்வினை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது. டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள், அஸ்வினை எடுக்க போட்டி போட்ட நிலையில், கடைசியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அவரைத் தட்டிச் சென்றது.

மன்கட் அவுட்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், ரவிச்சந்திரன் அஸ்வின் இணைந்த உடனேயே, அந்த அணியிலுள்ள ஒரு வீரருடன் ஒப்பிட்டு, அதிக மீம்ஸ்களை ரசிகர்கள் பறக்க விட்டனர். இதற்கு காரணம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் இடம்பெற்றிருப்பது தான். கடந்த 2019 ஆம் ஆண்டு, ஐபிஎல் போட்டியில், ஜோஸ் பட்லரை, மன்கட் முறையில், அஸ்வின் அவுட்டாக்கி இருந்தார்.

ஜோஸ் பட்லர் - அஸ்வின்

இந்த சம்பவம், அதிக சர்ச்சைகளை கிளப்பியிருந்த நிலையில், கிரிக்கெட் நிபுணர்கள் பலரும், மன்கட் அவுட் முறை பற்றி, அதிக விவாதங்களை கிளப்பியிருந்தனர். அதே போல, ஐசிசி விதிகளில் இதற்கு இடமுள்ளதால், அஸ்வினுக்கு ஆதரவாக சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். இன்னொரு பக்கம், அதிகம் எதிர்ப்பினையும் அஸ்வின் சந்தித்திருந்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐபிஎல் வரலாற்றில், முக்கிய சர்ச்சைகளில் இடம்பெற்றிருந்த இரண்டு வீரர்கள், தற்போது ஒரே அணியில் இணைந்து ஆடவிருப்பது, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அஸ்வின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்துள்ளது பற்றி, பட்லர் பேசும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இனி கவலை வேண்டாம்

அதில், 'ஹாய் அஸ்வின். நான் ஜோஸ் பேசுகிறேன். இனி கவலைப்பட வேண்டாம். நான் கிரீஸுக்குள் இருப்பேன். உங்களை பிங்க் நிற ஜெர்சியில் பார்க்க ஆவலாக உள்ளேன். டிரஸ்ஸிங் ரூமை உங்களுடன் பகிர்ந்து கொள்வதையும் எதிர்நோக்கியுள்ளேன்' என தெரிவித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன், முட்டி மோதிக் கொண்ட வீரர்கள், இந்த முறை ஒரே அணியில் ஆடவுள்ளது, ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

JOS BUTLER, RAVICHANDRAN ASHWIN, RAJASTHAN ROYALS, MANKAD, IPL 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்