‘எவ்ளோ தடுத்தும் கேட்கல’.. சச்சின் காலை தொட்டு வணங்கிய PBKS கோச்.. நெகிழ்ச்சி வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பஞ்சாப் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் சச்சின் டெண்டுல்கரின் காலை தொட்டு வணங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | கடையில் தனியாக இருக்கும் ‘பெண்கள்’ தான் குறி.. சிக்கிய பட்டதாரி இளைஞர்.. வெளியவந்த திடுக்கிடும் தகவல்..!

ஐபில் தொடரில் நேற்றைய 23-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, மயங்க் அகர்வால் (52 ரன்கள்) மற்றும் ஷிகர் தவானின் (70 ரன்கள்) அதிரடி ஆட்டத்தால் 20 ஓவரில் 198 ரன்களை குவித்தது. இதனை அடுத்து 199 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 186 ரன்கள் அடித்து 12 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த நிலையில் போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும், பயிற்சியாளர்களும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டு சென்றனர். அப்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளரும், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான ஜாண்டி ரோட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகரும், இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கரின் காலில் விழுந்தார்.

ஜாண்டி ரோட்ஸுக்கு 52 வயது, சச்சின் டெண்டுல்கருக்கு 48 வயது. சச்சின் டெண்டுல்கர் தன்னைவிட வயது குறைவானவர் என்றாலும், கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படும் லெஜண்ட் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டில் தன்னைவிட பெரியவர் என்ற முறையில் அவரது காலில் ஜாண்டி ரோட்ஸ் விழுந்தார். ஆனால் அதை விரும்பாத சச்சின் டெண்டுல்கர், ஜாண்டி ரோட்ஸின் கைகளை பிடித்து தடுக்க முயன்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Also Read | 8 வருசத்துக்கு முன்னாடியும் MI இப்படிதான் தோத்தாங்க.. ஆனா அதுக்கப்புறம் நடந்ததே வேற.. அந்த ‘மேஜிக்’ மறுபடியும் நடக்குமா..?

 

CRICKET, IPL, JONTY RHODES, SACHIN TENDULKAR, MI VS PBKS, IPL 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்