3 இடத்துல எலும்பு முறிவு.. பிரபல இங்கிலாந்து வீரருக்கு நேர்ந்த பரிதாபம்.. இனி ஒரு வருஷத்துக்கு ரெஸ்ட் தான்.. ரசிகர்களை கலங்க வச்ச புகைப்படம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஜானி பேர்ஸ்டோ, காயமடைந்த தனது காலின் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அறுவை சிகிச்சை முடிவடைந்து இருப்பதாகவும் தற்போது ஓய்வில் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த புகைப்படம் கிரிகெட் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | மகளுக்கு அம்மா கொடுத்த சாதாரண ஜாடி.. ஏலத்துல நடந்ததை பார்த்துட்டு அதிகாரிகளே ஷாக் ஆகிட்டாங்க.. இதையா இவ்வளவு நாளா வீட்ல சும்மா வச்சிருந்தீங்க..!

ஜானி பேர்ஸ்டோ

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கீப்பரும் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவருமான ஜானி பேர்ஸ்டோ சமீபத்தில் கோல்ஃப் விளையாட சென்றிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக சறுக்கி விழுந்ததில் அவருடைய காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் T20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் அவர் சேர்க்கப்படவில்லை. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் அவர்.

நன்றி

அதில்,"என்னுடைய காயம் மற்றும் சிகிச்சையின் தற்போதைய நிலை குறித்து உங்களுக்கு தெரிவிக்கவே இதை எழுதுகிறேன். என்னுடைய கீழ் மூட்டுகளில் 3 இடத்தில் முறிவு ஏற்பட்டது. மேலும், கணுக்கால் இடம் பெயர்ந்துவிட்டது. அறுவை சிகிச்சை நல்ல முறையில் முடிந்திருக்கிறது. கட்டுகள் அகற்றப்பட்டிருக்கின்றன. வீக்கங்களை குறைப்பதற்கு சிகிச்சை பெற்று வருகிறேன். என்னுடைய கணுக்கால் மீண்டும் அசைய துவங்கியிருக்கிறது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஓய்வு அவசியம். 2022 ஆம் ஆண்டில் உள்ள எஞ்சிய போட்டிகளில் என்னால் பங்கேற்க இயலாது. அடுத்த வருடத்திற்கு நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த சூழ்நிலையில் உறுதுணையாக இருந்த அனைவர்க்கும் நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னுடைய காலின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருக்கிறார். இது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், T20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஜானி பேர்ஸ்டோவுக்கு பதிலாக அலெக்ஸ் ஹேல்ஸ் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த ஆண்டு 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஆறு சதங்களை விளாசியதுடன் 1061 ரன்களை பேர்ஸ்டோ குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | "தம்பி கோட்டுக்கு உள்ள வாங்க.. செஞ்சிட போறேன்".. SA வீரருக்கு சஹார் கொடுத்த வார்னிங்.. சேட்டையான வீடியோ..!

CRICKET, JONNY BAIRSTOW, INJURED LEG

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்