"என்ன பத்தி என்ன தெரியும் உங்களுக்கு??.. இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்கீங்க!!.." வாகனுக்கு வேற லெவலில் 'பதிலடி' கொடுத்த இங்கிலாந்து 'வீரர்'.. 'பரபரப்பு' சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், மீதமுள்ள மூன்று போட்டிகளில் தோல்வியைத் தழுவி, தொடரையும் இழந்திருந்தது.

இந்தியாவின் பிட்ச்கள் தரமற்று இருந்தது என இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் பலர் குற்றஞ்சாட்டியிருந்தனர். அதே போல, இங்கிலாந்து அணியின் ரொட்டேஷன் பாலிஸியையும் சிலர் விமர்சனம் செய்திருந்தனர். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், முதல் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தான் களமிறங்கியிருந்தார்.

இதனை, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். 'ஆர்ச்சருக்கு டெஸ்ட் போட்டி விளையாடுவதில் விருப்பமில்லை என நான் நினைக்கிறேன். அதற்கான காரணம் என்ன என்பதை இங்கிலாந்து அணி நிர்வாகம் கண்டுபிடிக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தன்னைப் பற்றி மைக்கேல் வாகன் கூறியுள்ள கருத்திற்கு வெறுப்பில் வேற லெவலில் பதிலடி கொடுத்துள்ளார் ஜோப்ரா ஆர்ச்சர். 'அறிமுக வீரர் யாரும் 110 சதவீதம் சரியாக விளையாட முடியாது. நானும் புதுமுக வீரர் தான். என்னைப் பற்றி சமீபத்தில் மைக்கேல் வாகன் கொடுத்த பேட்டியைப் பார்த்தேன். எனக்கு டெஸ்ட் ஆட விருப்பமில்லை என்பது அவருக்கு எப்படி தெரியும்.


நானும் அவரும் கிரிக்கெட் பற்றி பேசியது கூட கிடையாது. எனக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்பதும் அவருக்கு தெரியாது. என்னைப் பற்றி குத்து மதிப்பாக அவர் பேசுவதை ஒப்புக் கொள்ள முடியாது' என்றார்.

மேலும், 'இப்போது நான் இங்கே ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் என்னுடைய விருப்பத்திற்கு தான் கிரிக்கெட் ஆட முடியும். மற்றவர்கள் கூறுவதைப் போல ஆட முடியாது. மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து ஆட வேண்டும் என நான் விருப்பப்படுகிறேன்.


டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவு. ஒரு போட்டிகளில் நான் ஐந்து விக்கெட்டுகளுக்கு குறைவாக எடுத்து விட்டால், உடனே விமர்சனம் செய்ய வந்து விடுவார்கள்' என ஆர்ச்சர் கடுமையாக சாடியுள்ளார்.

தொடர்ந்து, கிரிக்கெட் போட்டிகள் மற்றும் வீரர்களை பற்றி விமர்சனம் செய்து வந்த வாகனுக்கு, ஆரச்சார் கொடுத்துள்ள பதிலடி, தற்போது மேலும் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்