'அவருக்கு வயசு 30 தான் ஆகுது...' 'சச்சினோட ரெக்கார்ட அவரு ப்ரேக் பண்ணுவாரு...' - ஜெஃப்ரி பாய்காட் நம்பிக்கை...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கைக்கு எதிரான ரெண்டாவது மற்றும் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கெனவே முதல் ஆட்டத்திலும் வென்றிருந்த இங்கிலாந்து, தற்போது தொடரைக் கைப்பற்றியுள்ளது. காலே டெஸ்டில் ஆட்ட நாயகன் விருது வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், தொடா் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டாா்.
2 டெஸ்ட் மேட்ச்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 426 ரன்கள் எடுத்துள்ளார் ஜோ ரூட். ஒரு சதமும் ஒரு இரட்டைச் சதமும் எடுத்துள்ளார். 30 வயது ரூட் இதுவரை 99 டெஸ்டுகளில் விளையாடி 19 சதங்கள், 49 அரை சதங்களுடன் 8249 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் சாதனைகளை ஜோ ரூட் முறியடிப்பார் என கிரிக்கெட் வர்ணனையாளரும் முன்னாள் வீரருமான ஜெஃப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார். ஒரு கட்டுரையில் அவர் தெரிவித்திருப்பதாவது,
டேவிட் கோவர், கெவின் பீட்டர்சன் ஆகியோரை விடவும் அதிக ரன்கள் எடுத்ததை மறந்து விடவும். ஜோ ரூட்டால் 200 டெஸ்டுகளில் விளையாட முடியும். சச்சினை விடவும் அதிக ரன்களைக் குவிக்க முடியும்.
ரூட்டுக்கு 30 வயது தான் ஆகிறது. இப்போதே 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8249 ரன்கள் எடுத்துள்ளார். பெரிய காயம் எதுவும் ஏற்படாவிட்டால் சச்சினின் 15,921 டெஸ்ட் ரன்கள் சாதனையை அவரால் கண்டிப்பாக முறியடிக்க முடியும்.
ரூட்டின் சமகால வீரர்களான கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் என அனைவரும் அற்புதமான வீரர்கள். அவர்களாலும் அதிக ரன்களை எடுக்க முடியும். ரூட்டை இவர்களுடன் தான் ஒப்பிட வேண்டும். அவருக்கு முன்னால் ஆடியவர்களுடன் ஒப்பிடக் கூடாது. ஒவ்வொரு வீரரும் சூழலுக்கு ஏற்றாற்போல உருவாகிறார்கள் என்றார்.
200 டெஸ்டுகளில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் 51 சதங்கள், 68 அரை சதங்களுடன் 15921 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘புஜாரா மட்டும் அதை பண்ணிட்டா, ஒருபக்க மீசையை எடுத்துறேன்’.. குறும்பாக ‘அஸ்வின்’ விட்ட ஓபன் சேலஞ்ச்..!
- ‘வாழ்க்கை ஒரு வட்டம்’! இவர் யாருன்னு தெரியுதா?.. மறுபடியும் அந்த ‘டயலாக்கை’ சொல்லி கலாய்க்கும் ரசிகர்கள்..!
- 'எவ்வளவு விலை கொடுத்தாலும் பரவாயில்ல...' 'அவர மட்டும் வாங்கியே ஆகணும்...' - ஆஸ்திரேலிய வீரரை இழுக்க நினைக்கும் 3 ஐபிஎல் அணிகள்...!
- “என் ஏரியாவுக்குள்ள மட்டும் பிட்ச் ஆச்சுன்னா..” - ஆஸ்திரேலியாவில் நேதன் லயனை எதிர்கொண்டது எப்படி? - ‘வீரர்’ சொன்ன சீக்ரெட்!
- துணைக் கேப்டன் பதவி கிடைக்கலைன்னு ‘வருத்தம்’ இருக்கா..? அஸ்வின் சொன்ன அசத்தல் பதில்..!
- வாசிங்டன் சுந்தர் களமிறங்கும் ‘புது’ இன்னிங்ஸ்.. சென்னை மாநகராட்சி ‘அசத்தல்’ அறிவிப்பு..!
- 'இது' தான் டிராவிட் எனக்கு அனுப்பிய கடிதம்!.. இத பிரிண்ட் அவுட் எடுத்து படிங்க!'.. தெறிக்கவிட்ட பீட்டர்சன்!.. பின்ன 'The Great Wall'னா சும்மாவா!?
- ‘அப்போ கண்கலங்கிட்டேன்’.. ‘அதை நான் எதிர்பாக்கவே இல்ல’.. ஆஸ்திரேலியா டூர் குறித்து மனம் திறந்த நடராஜன்..!
- VIDEO: 'ஜென்டில்மேன் கேம்ன்னு நிரூபிச்சிட்டாரு யா மனுஷன்'... 'கண்ணுக்கு முன்னாடி இருந்த கங்காரு கேக்'... நெகிழவைக்கும் வீடியோ!
- ‘வலைப் பயிற்சிக்கு பந்துவீச வந்தவங்களயும்’.. ‘ஏ டீமையும் வெச்சு’.. ‘இப்படி பங்கம் பண்ணிட்டு போய்ட்டாங்களே இந்தியர்கள் அய்யகோ’! - புலம்பித் தள்ளிய ஆஸி வீரர்!