‘தப்பு கணக்கு போட்டுட்டேன்’!.. நாங்க தோத்ததுக்கு ‘இதுதான்’ காரணம்.. புலம்பும் இங்கிலாந்து கேப்டன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததற்கான காரணத்தை இங்கிலாந்து கேப்டன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆரம்பத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது. ஆனால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமியும், பும்ராவும் ஆட்டத்தின் போக்கை மாற்றினர். 9-வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியை கடைசி வரை இங்கிலாந்து அணியால் அவுட்டாக்க முடியவில்லை.

இதனால் கடைசி நாள் ஆட்டத்தில் 8 விக்கெட் இழப்புக்கு 298 ரன்களை எடுத்து இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் 120 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட்டாகி தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ‘ஒரு கேப்டனாக இந்த தோல்வியை நான் ஏற்றுக்கொள்கிறேன். இன்னும் சிறப்பாக வித்தியாசமாக சிந்திக்க தவறிவிட்டேன். முகமது ஷமி, பும்ராவின் பார்ட்னர்ஷிப்தான் ஆட்டத்தின் முக்கிய திருப்புமுனையாக கருதுகிறேன். அவர்கள் இருவரையும் அவுட்டாக்கும் விஷயத்தில் நான் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்க வேண்டும். அவர்களின் சிறப்பான ஆட்டம்தான் எங்களை இக்கட்டான நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது.

இந்தியாவை ஆல் அவுட் ஆக்க முடியாதது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் கடைசி வரிசை பேட்ஸ்மேன்களை நான் குறைத்து கணித்துவிட்டேன். அது தவறு என தற்போது புரிந்துக்கொண்டேன். அவர்கள் எத்தகைய பந்தையும் எதிர்கொண்டு விளையாடும் திறன் கொண்டவர்கள் என தெரிந்தது. எங்களது பந்துவீச்சில் இன்னும் வீரியமும், விவேகமும் இருந்திருக்கலாம்’ என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்