கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.. நம்ம ‘சென்னை’ கிரவுண்டில் அபார சாதனை படைத்த இங்கிலாந்து வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் வரலாற்று சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 578 ரன்களை இங்கிலாந்து அணி குவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 218 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 82 ரன்களும் மற்றும் டாம் சிம்லே 87 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணியைப் பொறுத்தவரை பும்ரா மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா மற்றும் நதீம் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதனை அடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸுல் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்ததன் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளார். தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜோ ரூட், இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் தங்களது 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்தது இல்லை. முன்னதாக பாகிஸ்தான் வீரர் இன்சமாம் உல் ஹக் தனது 100-வது டெஸ்டில் 184 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. இதனை ஜோ ரூட் முறியடித்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்