"இந்த தடவ 'RCB' ஜெயிக்க வாய்ப்பிருக்கா??.." 'மும்பை' இந்தியன்ஸ் வீரரிடம் 'ரசிகர்' கேட்ட 'கேள்வி'.. பதிலுக்கு அவரு சொன்ன 'விஷயம்' தான் 'அல்டிமேட்'!.. 'வைரல்' ட்வீட்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசன், நாளை மறுநாள் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த தொடருக்கான மினி ஏலம், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றிருந்தது.

இந்த ஏலத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி, நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷமை (Jimmi Neesham) ஏலத்தில் எடுத்திருந்தது. கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக ஆடிய நீஷமை, அந்த அணி ஏலத்திற்கு முன்பாக விடுவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, மும்பை அணி அவரது அடிப்படை விலையான 50 லட்ச ரூபாய்க்கு எடுத்தது.

ஆல் ரவுண்டரான ஜிம்மி நீஷம், சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருக்கக் கூடிய நபர். அது மட்டுமில்லாமல், சக கிரிக்கெட் வீரர்களை கிண்டல் செய்வது, ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு வேடிக்கையாக பதிலளிப்பது என மிகவும் ஜாலியாக இருக்கக் கூடிய நபர். அப்படி, ரசிகர் ஒருவரின் கேள்விக்கு ஜிம்மி நீஷாம் தெரிவித்த பதில் தான், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

ரசிகர் ஒருவர் நீஷமிடம், 'இந்த முறை ஆர்சிபி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) அணிக்கு வாய்ப்பு எப்படி இருக்கிறது?' என கேள்வி கேட்டிருந்தார். கடந்த 13 சீசன்களில் சிறந்த அணியாக விளங்கும் பெங்களூர் அணி, ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியதில்லை. ஒவ்வொரு சீசனின் போதும், அந்த அணி கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

 



இதனால், இந்த முறையாவது வெற்றி பெறுமா என்பது போல் ரசிகர் கேள்வி எழுப்பினார். ஆனால், மும்பை அணியில் இருக்கும் ஜிம்மி நீஷமிடம் இது பற்றி கேட்ட நிலையில், அவர் வேற லெவலில் பதில் ஒன்றை தெரிவித்துள்ளார்.



'அநேகமாக பெங்களூர் அணியில், பூஜ்ய சதவீதம் தான் எனக்கு வாய்ப்பு கிடைக்கும்' என தான் பெங்களூர் அணிக்கு, இந்த சீசனில் ஆடப் போவதில்லை என்பதைக் குறிப்பிட்டு நீஷாம் அப்படி ஒரு பதிலை தெரிவித்துள்ளார்.

 

நெட்டிசன்களிடையே இந்த பதில் அதிகம் வைரலாகி வருகிறது. இன்னும் சில தினங்களில், ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளதால், ஐபிஎல் போட்டிகள் பற்றி நீஷம் போடும் ட்வீட்கள், ரசிகர்களிடம் அதிக கவனத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்