முதல் டெஸ்ட் 2010-ல, 2வது 2022-ல.. 12 வருடம் கழித்து முதல் விக்கெட் எடுத்த உனத்கட்!! குவியும் வாழ்த்துக்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வங்காளதேச சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தற்போது டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "உலகிலேயே அதிகம் வெறுக்கப்படும் நபர்".. சிறப்பாக ஆடிய அர்ஜென்டினா கோல் கீப்பருக்கு கிடைத்த பெயர்.. சர்ச்சை பின்னணி!!

முன்னதாக நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் இரு போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றிய வங்காளதேச கிரிக்கெட் அணி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, கடைசி ஒரு நாள் போட்டியில் மட்டும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இதற்கடுத்து தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும் நடந்து வருகிறது.

இதன் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, 227 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருந்தது. இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தங்களின் முதல் இன்னிங்சில் இந்திய அணி தற்போது ஆடி வருகிறது. இதற்கிடையில், இந்திய அணிக்காக சுமார் 12 ஆண்டுகள் கழித்து டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்துள்ள வீரர் குறித்த செய்தி, தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சளரான ஜெய்தேவ் உனத்கட், கடந்த 2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி இருந்தார். அப்போது இந்திய அணியில், கவுதம் கம்பீர், சேவாக், டிராவிட், சச்சின், லக்ஷ்மண், தோனி, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் அணியில் இடம்பெற்றிருந்தனர். அதே போல, அந்த சமயத்தில் கோலி, ரோஹித் உள்ளிட்ட வீரர்கள் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகவில்லை.

இந்த நிலையில் தான், தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியை சுமார் 12 ஆண்டுகள் கழித்து ஆடுகிறார் ஜெய்தேவ் உனத்கட். அப்படி இருக்கையில், முதல் டெஸ்ட் போட்டியில் தன்னுடன் ஆடிய ராகுல் டிராவிட், தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ளார். மேலும் பல இளம் வீரர்கள் கூட இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.

ஜெய்தேவ் உனத்கட் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி 12 ஆண்டுகள் (4389 நாட்கள்) கழித்து தனது 2 ஆவது டெஸ்ட் போட்டியை ஆடியுள்ள சூழலில், இதற்கு மத்தியில் இந்திய அணி 118 டெஸ்ட் போட்டிகளை ஆடி உள்ளது. இத்தனை நாட்கள் கழித்து இந்திய அணியில் உனத்கட் இடம்பிடிக்க காரணம், சமீப காலமாக அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவது தான். அவரது தலைமையில் ரஞ்சி தொடர் மற்றும் விஐய் ஹசாரே தொடரை சவுராஷ்ட்ரா அணி வென்றிருந்தது. அதே போல, எக்கச்சக்க விக்கெட்டுகளை எடுத்தும் அசத்தி இருந்தார் உனத்கட்.

அப்படி தான், தற்போது வங்களாதேச தொடரில் உனத்கட்டிற்கு வாய்ப்பு கிடைத்திருந்தது. முதல் போட்டியில் ஆடாத உனத்கட், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | 20க்கும் மேற்பட்ட கொலைகள்.. இந்தியா, நேபாளம்ன்னு ஆசியாவையே அலற விட்ட சீரியல் கில்லர் விடுதலை.. பீதியை கிளப்பும் பின்னணி!!

CRICKET, JAYDEV UNADKAT, TEST MATCH, WICKET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்