கிராமத்தில் இருந்து கிளம்பிய புயல்.. கோப்பை கனவை அடைந்ததும் மைதானத்தில் கண்ணீர் விட்ட உனத்கட்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே டிராபியின் இறுதி போட்டி நடந்து முடிந்துள்ளது.

Advertising
>
Advertising

ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான மகாராஷ்டிரா அணியை ஜெய்தேவ் உனத்கட் தலைமையிலான சவுராஷ்டிரா அணி இறுதி போட்டியில் வீழ்த்தி, இரண்டாவது முறையாக விஜய் ஹசாரே கோப்பையை வென்றுள்ளது.

சவுராஷ்டிரா கோப்பையை கைப்பற்றி உள்ள சூழலில், இந்திய அணி வீரரான ஜெய்தேவ் உனத்கட் தொடர்பான செய்தியும் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

இந்திய சர்வதேச அணிக்காக ஆடி வந்த ஜெய்தேவ் உனத்கட்டிற்கு 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால், அதே வேளையில் ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே டிராபி உள்ளிட்ட தொடர்களில் தொடர்ந்து ஆடி வந்தார் உனத்கட். அதே போல, ஐபிஎல் தொடரிலும், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக உனத்கட் ஆடி இருந்தார்.

சர்வதேச போட்டிகளில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருந்தாலும், ரஞ்சிக் கோப்பை தொடரில் சவுராஷ்டிரா அணியின் தலை எழுத்தை மாற்றி எழுதி இருந்தார் உனத்கட். 2012, 2015 மற்றும் 2018 ஆகிய மூன்று முறை ரஞ்சி கோப்பைத் தொடரின் இறுதி போட்டி வரை முன்னேறி இருந்த சவுராஷ்டிரா அணி தோல்வியை மட்டுமே சந்தித்திருந்தது.

அப்படி இருக்கையில், 2019 -  20ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பை தொடரில் உனத்கட் தலைமையிலான சவுராஷ்டிரா அணி களம் இறங்கி இருந்தது. அடுத்தடுத்து சிறப்பாக ஆடிய இறுதி போட்டிக்கு முன்னேறியதுடன் பெங்கால் அணியை வீழ்த்தி, முதல் முறையாக ரஞ்சி கோப்பையையும் சவுராஷ்டிரா அணி வென்றிருந்தது.

ரஞ்சி தொடரை வெல்ல உனத்கட் கேப்டன்சி உதவிய போதும் அவருக்கு சர்வதேச போட்டிகள் மற்றும் முதல் தர போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு உருக்கமான பதிவு ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.

ரஞ்சிக் கோப்பை தொடரில் 68 விக்கெட்டுகள் எடுத்த போதும் அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து ஆதங்கப்பட்டு உருக்கமாக ட்வீட் செய்திருந்த உனத்கட், கிராமத்தில் இருந்து வந்த சிறுவன் கனவு பலிக்காது என்று எல்லாம் எனக்கு முத்திரை குத்தினார்கள் என்றும் அவர்கள் அனைவரையும் நான் நன்றாக விளையாடினேன் என பேச வைத்ததே எனக்கு அனுபவம் பெற்றுத் தந்தது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, ரஞ்சிக் கோப்பை தொடரில் சவுராஷ்டிரா அணிக்காக கோப்பையை வாங்கி கொடுத்த உனத்கட் தலைமையில், தற்போது விஜய் ஹசாரே தொடரிலும் அந்த அணி களமிறங்கி இருந்தது.

ஆரம்பத்தில் இருந்தே இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வந்த உனத்கட் தலைமையிலான சவுராஷ்டிரா அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுடன் மட்டுமில்லாமல் மகாராஷ்டிரா அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக விஜய் ஹசாரே கோப்பையையும் கைப்பற்றி உள்ளது.

15 ஆண்டுகளாக சவுராஷ்டிரா அணி விஜய் ஹசாரே கோப்பையை கைப்பற்றவில்லை என்ற சூழலில், அதற்கும் உனத்கட் கேப்டன்சியில் ஆடிய சவுராஷ்டிரா அணி விடை கூறி உள்ளது.

விஜய் ஹசாரே கோப்பையை தனது அணி வென்றதும் மைதானத்தில் முழங்காலிட்டு அமர்ந்தபடி உனத்கட் கண்கலங்கியது தொடர்பான விஷயமும் கிரிக்கெட் ரசிகர்கள் பலரை மனம் உருக வைத்தது. இனிவரும் சர்வதேச தொடர்களில் உனத்கட் நிச்சயம் இடம்பெறுவார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

JAYDEV UNADKAT, VIJAY HAZARE TROPHY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்