அவருக்குலாம் 'ஓபனிங்' பேட்டிங் கொடுக்காதீங்க...! 'அவர' அந்த ஆர்டர்ல இறக்கினா தான் கரெக்ட்டா இருக்கும்...! - முன்னாள் பிசிசிஐ அதிகாரி அறிவுரை...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர்களை இறக்கி விடுங்க, பழகட்டும் என முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்த அணியுடனான டி20 தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. தற்போது நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.

டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெறவிருக்கும் நிலையில் இந்திய அணி பேட்டி வரிசை குறித்து முன்னாள் தேர்வுக்குழு அதிகாரி ஜட்டின் பரஞ்சப்பே இந்திய கிரிக்கெட் அணியின் வரிசையாய் மாற்றுமாறு கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறும் போது, 'நியூசிலாந்து அணியுடம் மோதும் இந்த டெஸ்ட் தொடர் இந்திய மண்ணில் நடைபெறுவதால் பேட்டிங் வரிசையில் சில மாற்றங்களை செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சிக்கலாம்.

வெளிநாடுகளில் விளையாடும் போது பேட்டிங் வரிசை முக்கியமானதாக இருந்திருக்கலாம். ஆனால் இந்திய மண்ணில் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது.

இதில் துவக்க வீரராக விளையாடி வரும் சுப்மன் கில் இம்முறை மிடில் ஆர்டரில் விளையாட வேண்டும். ஏனென்றால் ரஹானே, புஜாரா இருவரும் இன்னும் சில வருடங்களே இந்திய அணியில் இருப்பார்கள் என்பதால் அவரின் இடத்தை நிரப்புவதற்கு சுப்மன் கில் போன்றோர் சரியாக இருப்பர் என நினைக்கிறேன்.

அதேபோல ஹனுமா விஹாரி, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களையும் மிடில் ஆர்டருக்கு பரிசோதித்து பார்க்க வேண்டும்' என தனது கருத்தினை முன்வைத்தார்.

முன்னாள் தேர்வுக்குழு அதிகாரி ஜட்டின் பரஞ்சப்பே கூறிய இதே கருத்தை சில வாரங்களுக்கு முன் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

JATIN PARANJPE, SHUBMAN GILL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்