முதுகில் ஆப்ரேஷன்.. தொடர் ஓய்வில் பும்ரா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்னதான் ஆச்சு..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவிற்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அடுத்த சில மாதங்களுக்கு அவர் ஓய்வில் இருப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

                         Images are subject to © copyright to their respective owners.

Also Read | "அவருக்கு எல்லா பந்தும் அவுட் மாதிரியே தெரியும்".. ஜடேஜாவை கலாய்த்த ரோஹித் ஷர்மா 😅..!

ஜஸ்பிரிட் பும்ரா

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சுற்றுப் பயணத்தின் போது இந்திய அணியில் அறிமுகமானார் ஜஸ்பிரிட் பும்ரா. இதுவரை 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 128 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். ஒரு நாள் போட்டிகளில் 72 போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்களையும் 60 டி20 போட்டிகளில் பங்கேற்று 70 விக்கெட்டுகளையும் ஜஸ்பிரிட் பும்ரா எடுத்திருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக திகழும் இவர் கடந்த சில மாதங்களாகவே காயம் காரணமாக எந்தவித போட்டியிலும் பங்கு பெறாமல் இருந்து வருகிறார்.

காயம்

கடந்த ஆண்டு செப்டம்பரில் தென்னாப்பிரிக்க அணியுடனான தொடரில் பும்ரா பங்கேற்றிருந்தார். அதன்பிறகு, அவர் இந்தியாவுக்காக எந்த வகையான கிரிக்கெட்டிலும் இடம்பெறவில்லை. அவரது காயத்திற்கு காரணம் அவரது கீழ் முதுகில் ஏற்பட்ட அழுத்தம் என கூறப்படுகிறது. அவர் ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் மீண்டும் களமிறங்கவிருந்தார். ஆனால் அவரது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அணியில் இருந்து விலக்கப்பட்டார்.

Images are subject to © copyright to their respective owners.

பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள பிசிசிஐயின் மருத்துவ ஊழியர்கள் பும்ராவிற்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். அதன்பிறகு அவர் நியூசிலாந்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அறுவை சிகிச்சை

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை பும்ராவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. ஓய்வுக்காக இந்த மாத இறுதி வரையில் பும்ரா நியூசிலாந்தில் இருப்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

உலகக்கோப்பை தொடருக்கு அவரை தயார்படுத்தும் நோக்கில் ஆகஸ்டு மாதம் அவருக்கான பந்து வீச்சு பயிற்சி துவங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது. அதன் பிறகு அவருக்கான பயிற்சிகள் படிப்படியாக அதிகரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | திடீரென தரைமட்டமான அடுக்குமாடி கட்டிடம்.. பதறிப்போன மக்கள்.. வீடியோ..!

CRICKET, JASPRIT BUMRAH, NEW ZEALAND, SURGERY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்