டி 20 உலக கோப்பை : சிக்கலில் இந்திய அணி??.. வெளியான லேட்டஸ்ட் தகவலால் கவலையில் ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 தொடரை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான் தொடரில் ஆடி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "எல்லா பொண்ணுங்களும்"... கருக்கலைப்பு விஷயத்தில்.. உச்சநீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு!!

இரு அணிகளும், 3 டி 20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளது. இதற்காக, இந்தியா வந்தடைந்த தென் ஆப்பிரிக்க அணி, நேற்று (28.09.2022) முதல் டி 20 போட்டியில் இந்தியாவை சந்தித்திருந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, தீபக் சாஹர் மற்றும் அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 9 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்க அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்திருந்தது.

இதன் பின்னர், இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் கே எல் ராகுல் மற்றும் சூர்யகுமார் ஆகியோர் அரை சதமடிக்க, இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி 20 போட்டி, அக்டோபர் 02 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.

இதனிடையே, டி 20 உலக கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர் தொடர்பான செய்தி, இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது.

டி 20 உலக கோப்பை, அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ளது. இதற்காக, இந்திய அணியும் தங்களின் வீரர்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. உலக அளவில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான் ஜஸ்பிரித் பும்ரா இதில் இடம்பெற்றிருந்தார்.

இதனிடையே, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டிக்கு முன்பாக பயிற்சயில் ஈடுபட்டிருந்த பும்ரா, காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும், நேற்றைய போட்டியில் கூட அவர் களமிறங்கவில்லை. இந்நிலையில், பும்ரா உடல்நிலை குறித்து ஒரு பரபரப்பு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

பும்ராவுக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, அடுத்த சில மாதங்களுக்கு அவர் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், இதனால் டி 20 உலக கோப்பையில் அவர் களமிறங்குவது கேள்விக்குறியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னதாக, ஆசிய கோப்பையில் காயம் காரணமாக பும்ரா இல்லாமல் போன சமயத்தில், இந்திய அணியின் டெத் ஓவர் பந்து வீச்சு, அதிக விமர்சனத்தை சந்தித்திருந்தது. இதனால், அவர்கள் சூப்பர் ஃபோர்ஸ் சுற்றுடன் வெளியேறினர். மேலும், டி 20 உலக கோப்பையில் பும்ரா தேர்வாகி இருந்ததால், டெத் ஓவர்களில் அவர் சிறப்பாக செயல்படுவார் என நம்பிக்கையுடனும் ரசிகர்கள் இருந்தனர்.

ஆனால், பும்ரா உடல்நிலை குறித்து தற்போது வெளியாகி உள்ள தகவல், உலக கோப்பையில் இந்தியாவுக்கு சிக்கலாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | "எதுமே இன்னும் சரியா கிடைக்கல".. தஞ்சை கோவிலை எண்ணி ஆதங்கப்பட்ட ஆனந்த் மஹிந்திரா.. பின்னணி என்ன??

CRICKET, BUMRAH, JASPRIT BUMRAH, T 20 WORLD CUP, INDIAN TEAM, டி 20 உலக கோப்பை, இந்திய அணி, ஜஸ்பிரித் பும்ரா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்