வம்பிழுத்த தென்னாப்பிரிக்க வீரர் - தன்னுடைய ஸ்டைலில் ரிவெஞ்ச் எடுத்த பூம்..பூம்..பும்ரா - வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியாவும் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவும் வெற்றிபெற்ற நிலையில் கப் யாருக்கு? என்ற பரபரப்பான நிலையில் மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் களங்கண்டு வருகின்றன.

Advertising
>
Advertising

கடந்த 11 ஆம் தேதி துவங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்வதாக அறிவித்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் - மயங்க் அகர்வால் சொதப்பினாலும் புஜாரா - கோலி இணை பொறுப்புடன் ஆடி ஸ்கோரை உயர்த்தியது.  இடைவெளிக்குப் பின்னர் அணிக்குத் திரும்பிய கோலி சதமடிக்காமல் திரும்புவதில்லை என்ற ரீதியில் கவனமுடன் ஆடினார். ஆனால், புஜாராவைத் தொடர்ந்து கிரீஸுக்கு வந்த யாரும் நிலைக்கவில்லை. அல்லது தென்னாப்பிரிக்க வீரர்கள் இந்திய பேட்ஸ்மேன்களை நிலைக்க விடவில்லை.

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோலி 79 ரன்னில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றினார். இறுதியில் முதல் இன்னிங்ஸ்சில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்களை மட்டுமே எடுத்தது..

பந்தை பிடிச்சிட்டு இப்படி பண்ணிட்டீங்களே மயங்க்.. கிரவுண்ட்டில் ‘செம’ கடுப்பான கோலி..!

சூடான பும்ரா

 

இந்திய அணியின் யார்க்கர் மன்னன் பும்ரா பேட்டிங் செய்கையில் தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் மார்க்கோ ஜென்சன் அடுத்தடுத்து பவுன்சர்களைப் போட்டு பும்ராவை சூடாக்கினார். இதனால் இரு வீரர்களுக்கு இடையேயும் காரசாரமான விவாதம் நடந்தது. இறுதியில் அம்பயர் வந்து இருவரையும் விலக்கிவிடும் படி ஆனது. ஜென்சன் போட்ட பவுன்சர்களை  உடலில் தடுத்து ஆடிய பும்ரா கொஞ்ச நேரத்திலேயே ரபாடாவின் பந்தில் கேட்ச் கொடுத்து டக்கில்  பெவிலியன் திரும்பினார்.

பழிக்குப்பழி

இந்நிலையில் தனது முதல் இன்னிங்க்ஸை தென்னாப்பிரிக்க வீரர்கள் துவங்க சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. அப்படி கிரீஸுக்கு மார்கோ ஜென்சன் வருகையில் பந்து பும்ராவின் கைகளில் இருந்தது. ஒரே ஃபுல்லர் லெந்த் பந்தில் ஜென்சனின் விக்கெட்டை தட்டித் தூக்கினார் பும்ரா. ஆஃப் ஸ்டம்ப் பல்டி அடித்த இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக  பரவிவருகிறது.

‘1 vs 11’.. இதனாலதாங்க அவரை ‘கிங்’ கோலின்னு சொல்றாங்க.. தாறுமாறாக புகழ்ந்த தென் ஆப்பிரிக்க வீரர்..!

 

210 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கவே, 13 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிவருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 57 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து விளையாடிவருகிறது. புஜாரா9 ரன்னுடனும் கோலி 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

CRICKET, JASPRIT BUMRAH, MARCO JANSEN, இந்திய கிரிக்கெட் அணி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்