‘6 மாசமாக குடும்பத்தை பிரிஞ்சு இருக்கோம்’.. கொஞ்ச நாளாவது எங்களுக்கு ‘ஓய்வு’ வேணும்.. வேதனையை வெளிப்படுத்திய இந்திய வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பயோ பபுளில் நீண்ட நாட்களாக இருப்பதால், மன அழுத்தமாக உள்ளதாக இந்திய வீரர் வேதனை தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி, தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தானையும், இரண்டாவது போட்டியில் நியூஸிலாந்தையும் எதிர்கொண்டது. ஆனால் இந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா மோசமான தோல்வியை சந்தித்தது. அதனால் இந்திய அணி, அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த நிலையில், தொடர்ந்து பயோ பபுளில் இருப்பது மன உளைச்சலை கொடுத்துள்ளதாகவும், அதனால் அனைவருக்கும் ஓய்வு தேவை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ‘உண்மையாவே எங்களுக்கு சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. குடும்பத்தை பிரிந்து 6 மாதங்களாக பயோ பபுளில் இருக்கிறோம். நன்றாக விளையாட வேண்டும் என நினைத்தாலும், களத்தில் இறங்கும்போது அதுபற்றி சிந்திக்கமுடியவில்லை.

சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டில் இருக்காது. எந்த சூழலில் விளையாடுகிறோம், எப்போது விளையாடுகிறோம் என்பதைப் பொறுத்துதான் எல்லாம் அமைகிறது. நீண்ட காலமாக குடும்பத்தை பிரிந்திருப்பது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனாலும் எங்களை நல்ல மனநிலையுடன் வைத்துக்கொள்ள பிசிசிஐ நிர்வாகமும் முயன்று வருகிறது.

தற்போது கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் அதற்காக சில பாதுகாப்பு விஷயங்களை கடைபிடிக்க வேண்டியுள்ளது. ஆனாலும் ஒரே விஷயத்தை மீண்டும், மீண்டும் செய்யும் போது மனரீதியாக அழுத்தம் ஏற்படுகிறது. இதன்காரணமாக தான் சில சமயங்களில் நமது கட்டுப்பாட்டை மீறி ஏதாவது சம்பவங்கள் நடந்துவிடுகின்றன’ என பும்ரா கூறியுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் விளையாடினர். இதனை அடுத்து ஐபிஎல் தொடர் முடிந்ததும் ஒரு வார இடைவெளிக்கு பின், மீண்டும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர்கள் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

TEAMINDIA, BUMRAH, T20WORLDCUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்