இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்படப் போகும் முன்னணி வீரர் இவர் தான்! ரசிகர்கள் சோகம்! எப்பேர்ப்பட்ட ப்ளேயர்...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை: மோசமான தென் ஆப்ரிக்க தொடருக்கு பிறகு இந்திய அணி West Indies அணிக்கு எதிரான உள்நாட்டு சீசனுக்கு தயாராக உள்ளது.

Advertising
>
Advertising

தென் ஆப்ரிக்க பயணத்துக்கு பின் இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடுகிறது. இந்திய கிரிக்கெட் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கும் இடையே அடுத்த மாதம் தொடங்கவுள்ள 6 போட்டிகள் கொண்ட 20 & 50 ஓவர்கள் தொடருக்கான திருத்தப்பட்ட புதிய இடங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியின் இந்திய சுற்றுப்பயணம் 2022 பிப்ரவரி 6 ஆம் தேதி ஒருநாள் போட்டியுடன் தொடங்க உள்ளது. 6 போட்டிகள் கொண்ட ஒயிட்-பால் தொடர் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் சர்வதேச தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட T20 சர்வதேச தொடர்களைக் கொண்டுள்ளது.

முன்னதாக, இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளும் வெவ்வேறு மைதானங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஒருநாள் போட்டிகள் அகமதாபாத், ஜெய்ப்பூர் மற்றும் கொல்கத்தாவில் நடைபெற இருந்தது. மேலும், டி20 சர்வதேச போட்டிகள் முறையே கட்டாக், விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. இருப்பினும், இப்போது மைதானங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, மேலும் அனைத்து ஒருநாள் போட்டிகளும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்திலும், டி20 போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டனிலும் நடைபெறும் என BCCI அறிவித்துள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.  மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கான அணியைத் தேர்வு செய்ய இந்திய தேர்வுக் குழு இந்த வாரம் கூடுகிறது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மா மீண்டும் களமிறங்க உள்ளார். தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் அனைத்து ஆட்டங்களிலும் பங்கேற்ற பிறகு, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட முகமது ஷமி மீண்டும் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் முற்றிலும் சொதப்பிய மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் அணியில் இருந்து நீக்கப்பட உள்ளார். பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்கள் ஷர்துல் தாக்கூர் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் தங்கள் அற்புதமான ஆல்ரவுண்டர் செயல்பாட்டிற்குப் பிறகு அணியில் தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த ஆல்-ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இன்னும் முழு உடல் தகுதியுடன் இல்லை, இருப்பினும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் அவர்களுக்கு பதில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் முழுமையான அட்டவணை 2022:

1வது ஒருநாள் போட்டி, பிப்ரவரி 6, ஞாயிறு, அகமதாபாத்

2வது ஒருநாள் போட்டி, பிப்ரவரி 9, புதன், அகமதாபாத்

3வது ஒருநாள் போட்டி, பிப்ரவரி 11, வெள்ளிக்கிழமை, அகமதாபாத்

1வது T20I, பிப்ரவரி 16, புதன்கிழமை, கொல்கத்தா

2வது T20I, பிப்ரவரி 18, வெள்ளி, கொல்கத்தா

3வது டி20, பிப்ரவரி 20, ஞாயிறு, கொல்கத்தா

CRICKET, VIRATKOHLI, BCCI, WEST INDIES, BHUVANESHWAR KUMAR, JASPRIT BUMRAH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்