என்னய்யா புது ட்விஸ்ட்டா இருக்கு.. கேப்டன் பதவிக்கு விருப்பம் தெரிவித்த முன்னணி வீரர்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் கேப்டன் பதவியை யாரும் வேண்டாம் என சொல்ல மாட்டார்கள் என வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றியது.

இதனை அடுத்து இந்திய டெஸ்ட் அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென விராட் கோலி இப்படி அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னாள் வீரர்கள் பலரும் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நேற்று பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு எடுத்தது குறித்து மீட்டிங்கில் அணி வீரர்களிடம் விராட் கோலி கூறினார். அவரது தனிப்பட்ட முடிவை நாங்கள் மதிக்கிறோம். அணிக்கு கேப்டனாக அவர் அளித்த பங்களிப்புக்காக நாங்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தோம். கோலியின் முடிவு சரியா தவறா என்று நான் கருத்து கூற முடியாது.

விராட் கோலியின் தலைமையின்கீழ் விளையாடியது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் அணியில் ஒரு முக்கிய நபராக எப்போதும் இருப்பார். அணிக்காக அவர் நிறைய பங்களித்துள்ளார். இன்னும் நிறைய பங்களிப்பை வருங்காலத்தில் அளிப்பார். இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டால், அதனை நான் மிகவும் கௌரவமாக கருதுவேம். எந்த ஒரு வீரரும் இந்திய அணியின் கேப்டன் பதவியை வேண்டாம் என்று சொல்லமாட்டார். நானும் அதில் மாறுபட்டவன் கிடையாது’ என பும்ரா தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனாக ரோஹித் ஷர்மா வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் தற்போது டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் டெஸ்ட் அணிக்கும் அவரே கேப்டனாக நியமிக்க பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை டெஸ்ட் அணிக்கு அவர் கேப்டனாக நியமிக்கப்படவில்லை என்றால், அடுத்த இடத்தில் துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் உள்ளார். அவர் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படி உள்ள சூழலில் பும்ரா கேப்டன் பதவியை ஏற்க விருப்பம் தெரிவித்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIRATKOHLI, ROHIT SHARMA, KLRAHUL, BUMRAH, TEAMINDIA, CAPTAIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்