ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஷ்ரேயாஸ் ஐயர்.. வலுவான பிளேயரை உள்ளே கொண்டுவந்த KKR அணி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா அணி கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில் அந்த அணி ஜேசன் ராயை உள்ளே கொண்டுவந்திருக்கிறது.
கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் போட்டிகள் டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற இருக்கின்றன.
இந்நிலையில் ஐபிஎல் தொடரின் முக்கிய வீரர்கள் சிலர் காயம் காரணமாக இந்த ஆண்டு தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் பும்ரா இந்த வருடம் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என தெரிகிறது. சமீபத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் ஓய்வில் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. மற்றொரு மும்பை வீரரான ரிச்சர்ட்சன் கிளப் கிரிக்கெட் போட்டியின் போது காயமடைந்த நிலையில் அவரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
அதேபோல, டெல்லி அணியின் ரிஷப் பண்ட் இந்த ஐபிஎல் தொடரை பங்கேற்க மாட்டார் என அந்த அணி அறிவித்திருந்தது. விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் பண்டுக்கு பதிலாக டெல்லி அணியை வார்னர் வழிநடத்தி வருகிறார். இப்படி முக்கிய வீரர்கள் காயம் காரணமாக வெளியேறிவரும் நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் காயம் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் அந்த அணியில் தற்போது இணைந்திருக்கிறார் ஜேசன் ராய். இங்கிலாந்து வீரரான ராய் கடந்த 2021 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்காக விளையாடி இருந்தார். அந்த சீசனில் 5 போட்டிகளில் விளையாடிய ராய் ஒரு அரைசதத்தையும் எடுத்திருந்தார். ஒருபக்கம் ஷ்ரேயாஸ் அய்யர் ஐபிஎல் தொடரில் விலகியிருக்கும் நிலையில் ஜேசன் ராய் உள்ளே வந்திருப்பது அந்த அணி ரசிகர்களிடையே அவர்மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
மற்ற செய்திகள்
ஒருவாரத்தில் திருமண நிச்சயதார்த்தம்.. மணப்பெண்ணுடன் வெளியே சென்ற புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்..!
தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் பிரபல கொல்கத்தா அணி வீரர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
- "இந்தா அறிவிச்சுட்டாங்கல்ல".. இனி ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலா இவரு தான் KKR கேப்டன்.. வெளியான Official தகவல்!!
- போச்சுடா.. பிரபல இந்திய வீரருக்கு அறுவை சிகிச்சை.. அடுத்த 5 மாதங்கள் ஓய்வு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
- "டி 20 மேட்ச்னா இப்டி இருக்கணும்".. ஒவ்வொரு பந்தும் ஃபயர்.. 20 ஓவர் மேட்சில் நடந்த வேற மாதிரி சம்பவம்!!
- கோலாகலமாக நடந்த LORD ஷர்துல் தாகூர் திருமணம்.. மனைவியுடன் கலந்து கொண்ட கேப்டன் ரோகித்.. கூட இந்த பிளேயரும் இருக்காரு! வைரல் போட்டோஸ்
- ஷிகர் தவான் & ஷ்ரேயாஸ் அய்யரின் தீயான டான்ஸ்.. மொத்த டீமும் கமெண்ட்-ல இறங்கிடுச்சு😂.. வீடியோ..!
- VIDEO: ஸ்ரேயாஸ்க்கு 'லக்' அதிகம்.. அவ்வளவு வேகமா பந்து போட்டும் பெயில்ஸ் விழுகல.. சோகமான வங்கதேச அணி.. புஜாரா & ஸ்ரேயாஸ் ரியாக்ஷன் தான் அல்டிமேட்!
- ஆண் குழந்தைக்கு தந்தையான ரஹானே.. "KKR டீம் போட்ட சூப்பர் கமெண்ட்".. வைரலாகும் இன்ஸ்டா பதிவு!!
- "அட, நம்ம ஷ்ரேயாஸ் ஐயருக்கு இப்டி ஒரு ரசிகையா??.." மழையில் 2 மணி நேரமா வெயிட்டிங்.. கடைசியில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்
- “இந்த மாதிரி மேட்சுக்கெல்லாம் எனக்கு அதிக சம்பளம் தரணும்”.. எதுக்காக KL ராகுல் இப்படி சொன்னார்..?