‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே’.. RCB-க்கு ‘புதிய’ கேப்டனாக இவர் வர வாய்ப்பு இருக்கு.. சூசகமாக சொன்ன முன்னாள் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ள வீரர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 15-வது சீசனில் அகமதாபாத், லக்னோ என்ற 2 புதிய அணிகள் இணைய உள்ளன. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியது.

அதன்படி கடந்த நவம்பர் 30-ம் தேதி அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டன. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விராட் கோலி, மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் ஆகிய 3 வீரர்களை தக்க வைத்துள்ளது.

கடந்த ஐபிஎல் தொடருடன் விராட் கோலி, பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். அதனால் அந்த அணிக்கு புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்? என்று கேள்வி எழுந்துள்ளது. அப்போது அந்த அணியில் ஏற்கனவே விளையாடிய ஏபி டிவில்லியர்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் திடீரென அனைத்து விதமான கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்க பட வாய்ப்புள்ள வீரர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘பெங்களூர் அணிக்கு புதிய கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு முன்னர் ஜேசன் ஹோல்டர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதனால் அவரை பெங்களூரு அணி குறிவைக்கும்’ என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘அதேபோல் சஹாலுக்கு மாற்றாக இளம் வீரர் ஒருவரை பெங்களூர் அணி குறி வைத்து வருகிறது. ஐபிஎல் ஏலத்துக்கு முன்பே சஹால் புதிய அணைக்கு செல்ல வாய்ப்புள்ளது. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் லெக் ஸ்பின்னர்களால் மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும்.

அதனால் சஹாலுக்கு பதிலாக ராகுல் சஹாரை தேர்ந்தெடுக்க பெங்களூரு அணி முயற்சி செய்யும்.  இதன் காரணமாக ராகுல் சஹாரை எவ்வளவு பணம் செலவழித்தாவது வாங்கிவிட வேண்டுமென்று பெங்களூரு அணி முனைப்பு காட்டும். இதற்கு அடுத்தபடியாக ரவி பிஷ்னாய் நல்ல தேர்வாக இருப்பார் என்பது எனது கருத்து’ என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

RCB, VIRATKOHLI, IPL, JASONHOLDER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்