"இதுதான் கடைசி.. இந்த முறையாவது கோர்ட்டுக்கு நேரில் வாங்க".. ஜடேஜா மனைவிக்கு கோர்ட் கொடுத்த சம்மன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா-விற்கு ஜாம் நகர் நீதிமன்றம் சம்மன் ஒன்றினை அனுப்பியுள்ளது. அதில்,"இதுதான் இறுதி அழைப்பு. இந்த முறை நேரில் வந்து விளக்கம் அளியுங்கள்" என கடுமை காட்டியுள்ளது கோர்ட். அப்படி என்ன நடந்தது?

Advertising
>
Advertising

தாக்குதல்

கடந்த 2018-ம் ஆண்டு குஜராத்தின் ஜாம்நகரில் தனது தாயாருடன் காரில் சென்று கொண்டிருந்தார் ரிவாபா. அப்போது, அவரது காரின் முன்னால் சென்றுகொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி இருக்கிறது. அந்த வாகனத்தை ஒட்டிச் சென்ற ப்ரீத்தி சர்மா ரிபாவாவின் கார் மோதியதால் கீழே விழுந்திருக்கிறார்.

அருகில் உள்ள  வித்யாசாகர் கல்வி நிறுவனத்தில் படித்துவந்த ப்ரீத்தி சர்மாவுக்கு இதில் லேசான காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து காயம் அடைந்த மாணவியை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார் ரிபாவா.

தாக்குதல்

இந்நிலையில், ப்ரீத்தி சர்மாவின் வாகனத்தின் மீது ரிபாவா-வின் கார் மோதிய இடத்திற்கு வந்த கான்ஸ்டபிள் ஒருவர் ரிபாவாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சம்பவத்தை நேரில்  பார்த்த ஒருவரது சாட்சியுடன் கான்ஸ்டபிள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார் ரிபாவா.

வழக்கு விசாரணை

பிரபல கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவியை கான்ஸ்டபிள் தாக்கியதாக சொல்லப்படும் இந்த வழக்கின் விசாரணை ஜாம் நகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணையில் நீதிமன்றம் பலமுறை ரிபாவாவை நேரில் வந்து வாக்குமூலத்தை அளிக்கும்படி சம்மன் அனுப்பிய போதிலும் ரிபாவா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இறுதி சம்மன்

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,"ரிவாபா மற்றும் அவரது தாயாருக்கு இதுவே இறுதி சம்மன். நேரில் ஆஜராகி வாக்குமூலத்தை பதிவு செய்யுங்கள்" என்று ஜாம் நகர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவிக்கு இறுதி சம்மனை ஜாம் நகர் நீதிமன்றம் அனுப்பிய விவகாரம் இப்போது இந்தியா முழுவதும் பேசு பொருளாகி உள்ளது.

RAVIDRAJADEJA, RIBAVA, JAMNAGAR, ரவீந்திரஜடேஜா, ரிபாவா, ஜாம்நகர்

மற்ற செய்திகள்