‘உலகக் கோப்பை சூப்பர் ஓவரின்போது’... ‘நியூசிலாந்து வீரரின் பயிற்சியாளர் உயிரிழப்பு'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்து ஆல் ரவுண்டர் ஜிம்மி நீசமின் பள்ளி பயிற்சியாளர், உலகக் கோப்பை சூப்பர் ஓவரின் போது உடல்நல குறைபாடு காரணமாக, உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது நியூசிலாந்து, இங்கிலாந்து ஆடிய போட்டி ‘டை’ ஆனது. பின்னர் சூப்பர் ஓவரிலும் இரு அணிகள் 15 ரன்கள் எடுத்து, அந்த போட்டியும் டையானதால், ஐசிசியின் பவுண்டரி விதி வைத்து இங்கிலாந்தை வெற்றி பெற்ற அணியாக அறிவித்தது. இந்நிலையில், நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீசமுக்கு இளம் வயதில், கிரிக்கெட் பயிற்சி அளித்த, டேவிட் ஜேம்ஸ் கார்டன் உயிரிழந்துள்ளார். கடந்த 5 வாரங்களாக, ஜேம்ஸ் கார்டன், இதய நோய் காரணமாக உடல்நலக் குறைவுடன் இருந்துள்ளார். வீட்டில் அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கடந்த வெள்ளியன்று அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இறுதிச் சுற்று ஆட்டம் நடைப்பெற்ற நாளில், ஜேம்ஸ் கார்டன் சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார். எனினும் நீசம் சூப்பர் ஓவரின் 2-வது பந்தில் சிக்ஸர் அடித்த போது, ‘தன்னுடைய அப்பா மூச்சு விடுவதை நிறுத்தி விட்டதாக’, கோர்டனின் மகள் லியோனி, தெரிவித்தார்.  இதற்கிடையே தனது பயிற்சியாளருக்கு ஜிம்மி நீசம் இரங்கல் தெரிவித்து ட்வீட்டியுள்ளார். அதில் ‘உங்களுக்கு கீழ் விளையாட நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். அத்தகைய போட்டி வரை நீங்கள் காத்திருந்தீர்கள். நீங்கள் பெருமைப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அனைத்துக்கும் நன்றி’ என நீசம் ட்விட் செய்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்