"கை, கால கட்டி போட்டு.." மும்பை அணியில் சாஹலுக்கு நேர்ந்தது என்ன? அதிர்ச்சியை கிளப்பிய தகவல்கள்.. சிக்கலில் முன்னாள் வீரர்??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடர் தற்போது செம விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 20 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், ஏறக்குறைய அனைத்து அணிகளும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிக்கு வேண்டி கடுமையாக போராடி வருகிறது.

Advertising
>
Advertising

இதில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.

கடந்த சீசனில், பெங்களூர் அணிக்காக ஆடி வந்த சாஹலை, அந்த அணி விடுவித்த நிலையில், மெகா ஏலத்தில் ராஜஸ்தான் அணி எடுத்துக் கொண்டது.

மும்பை அணியில் நடந்த அதிர்ச்சி..

இதுவரை நான்கு போட்டிகளில் ஆடியுள்ள ராஜஸ்தான் அணி, மூன்றில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலிலும் முதலிடம் வகிக்கிறது. அதே போல, 11 விக்கெட்டுகளை எடுத்துள்ள சாஹல், அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். இந்நிலையில், சில முன்னாள் வீரர்கள் குறித்து சாஹல் தெரிவித்திருந்த கருத்து, தற்போது அதிகம் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

கை, கால் எல்லாம் கட்டி போட்டாங்க..

2011 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியில் சாஹல் இடம்பெற்றிருந்தார். அப்போது, அந்த அணியில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மற்றும் நியூசிலாந்து வீர்ர் ஜேம்ஸ் பிராங்க்ளின் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.


இவர்கள் தனக்கு செய்த சம்பவம் ஒன்றை பற்றி பேசிய சாஹல், "2011 ஆம் ஆண்டு நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தேன். அப்போது அந்த அணி, சாம்பியன்ஸ் லீக் கோப்பையைக் கைப்பற்றி இருந்தது. மேலும், நாங்கள் அந்த சமயத்தில் சென்னையில் இருந்தோம். அந்த வேளையில், சைமண்ட்ஸ் மற்றும் ஜேம்ஸ் பிராங்க்ளின் ஆகிய இருவரும் இணைந்து எனது கை மற்றும் கால்களைக் கட்டி, வாயிலும் டேப் ஒட்டி விட்டு அறையில் போட்டு அடைத்து விட்டு வெளியேறிச் சென்று விட்டனர்.

மன்னிப்பு கூட கேட்கல..

பார்ட்டிக்கு நடுவே, என்னைக் கட்டிப் போட்ட விஷயத்தை அவர்கள் இருவரும் மறந்து போய் விட்டார்கள் என நான் நினைக்கிறேன். இரவு நேரத்தில் அவர்கள் என்னை மறந்ததையடுத்து, மறுநாள் காலையில், அறையை சுத்தம் செய்ய வந்த நபர், என்னை பார்த்ததும் மற்ற சிலரை அழைத்து, கட்டவிழ்த்து விட்டார். அவர்கள் எவ்வளவு நேரமாக இங்கு இருக்கிறாய் என என்னிடம் கேட்க, இரவு முழுவதும் அங்கு இருந்ததாக தெரிவித்தேன். இதுகுறித்து, சைமண்ட்ஸ் மற்றும் ஜேம்ஸ் பிராங்க்ளின் ஆகியோர் என்னிடம் மன்னிப்பு கூட  கேட்கவே இல்லை" என சாஹல் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விஷயம் கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் பரபரப்பை கிளப்பி இருந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு ஜேம்ஸ் பிராங்க்ளினுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. நியூசிலாந்து அணியின் முன்னாள் பந்து வீச்சாளரான ஜேம்ஸ் பிராங்கிளின், கவுண்டி கிரிக்கெட் ஆடும் துர்ஹாம் அணியின் தலைமை பயிற்சியாளராக, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார்.

சாஹல் சொன்ன விஷயம், பெரிய அளவில் சர்ச்சை ஆனதால், ஜேம்ஸ் பிராங்க்ளினிடம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தப்படும் என துர்ஹாம் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் இந்த விஷயத்தை சாஹல் சொல்லி இருந்தாலும், மும்பை அணிக்காக ஆடிய போது, ஒரு வீரரால், ஹோட்டல் ஒன்றில் 15 ஆவது மாடி பால்கனியில் தான் தொங்க விடப்பட்டிருந்தது பற்றி சமீபத்தில் அவர் தெரிவித்திருந்ததால், இந்த விவகாரம் மீண்டும் எழுந்துள்ளது.

CHAHAL, SYMONDS, JAMES FRANKLIN, IPL 2022, MUMBAI INDIANS, சாஹல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்