'ஸ்டூவர்ட் பிராட்-ஐ பாலியல் ரீதியாக விமர்சித்த ஆண்டர்சன்'!.. 'Delete பண்ணா கண்டுபிடிக்க முடியாதா'!?.. தோண்ட தோண்ட வெளிவரும் உண்மைகள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாலியல் ரீதியாக சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டிருந்த வீரர்களின் பட்டியலில் தற்போது புதிதாக இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சிக்கியுள்ளார்.

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்ட ஓலே ராபின்சன், முதல் போட்டியிலேயே 7 விக்கெட்டுகளும், 42 ரன்களும் எடுத்து கவனத்தை ஈர்த்தார். ஆனால், எட்டு வருடங்களுக்கு முன்பு அவர் இனவெறி குறித்தும், பாலியல் குறித்தும் பதிவிட்ட ட்வீட்டுக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரை அனைத்து வித சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சஸ்பெண்ட் செய்தது.

ஓலே ராபின்சன், கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் தனது ட்விட்டரில் இனவெறி மற்றும் பாலியல் குறித்து செய்த ட்வீட்ஸ் சர்ச்சையில் சிக்கியது. அவர் தனது ட்வீட் ஒன்றில், வீடியோ கேம்ஸ் விளையாடும் பெண்கள், உண்மையில் கேம்ஸ் விளையாடாத பெண்களை விட அதிக உடலுறவு கொள்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இதுபோல், இனவெறி குறித்தும் ட்வீட் செய்திருந்தார். பிறகு, இந்த விவகாரம் வெளியில் தெரிந்ததும் அவர் பகிரங்க மன்னிப்பு கோரினார். இதற்கான வீடியோவே அவர் வெளியிட்டிருந்தார்.

அதேசமயம், இந்த விவகாரத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. எதிர்காலத்தில் இனிமேல் ராபின்சன் சம்பவம் போல் நிகழாமல் இருக்க, புதிதாக அணியில் இணையும் வீரர்களின் கடந்த கால சமூக வலைதள ட்வீட்ஸ், மெசேஜஸ் குறித்து ஆய்வு செய்யப்படும்.

ராபின்சன் தனது செயல் குறித்து இங்கிலாந்து அணிக்கும், இந்த உலகிற்கும் மன்னிப்பு கேட்க வேண்டியுள்ளது என்று இங்கிலாந்து பேட்டிங் பயிற்சியாளர் கிரஹாம் தோர்ப் கூறியிருந்தார். இதன் பிறகே, அவர் அனைத்து வித சர்வதேச போட்டிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டார். 

இந்த நிலையில், தற்போது இங்கிலாந்து அணியின் மூத்த பவுலரும், லெஜண்ட் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவருமான ஜேம்ஸ் ஆண்டர்சன், தனது 11 ஆண்டுகளுக்கு முந்தைய ட்வீட்டால் சிக்கியிருக்கிறார். அதாவது, 2010ம் ஆண்டு, சக வீரர் ஸ்டூவர்ட் பிராட் குறித்து அவர் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பிராட்டின் புது ஹேர் ஸ்டைலை இன்று தான் நான் முதன் முதலாக பார்த்தேன். அவர் பார்க்க 15 வயது லெஸ்பியன் போல தோற்றமளித்தார் என்று ட்வீட்செய்துள்ளார். 

இந்த ட்வீட் இப்போது வைரலாக, இதுகுறித்து தன்னிலை விளக்கம் அளித்துள்ள ஆண்டர்சன், அது நான் 10 - 11 வருடங்களுக்கு முன்பு செய்த ட்வீட். நான் இப்போது ஒரு நபராக முற்றிலும் மாறியுள்ளேன். தவறுகள் நாம் செய்வதுதான். பல ஆண்டுகளுக்கு முன்பு ஏதேனும் ட்வீட் செய்திருந்தால், நாம் அதிலிருந்து இப்போது பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் சிறப்பானவர்களாக நம்மை மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

எனினும், இனவெறி குறித்தும், பாலியல் குறித்தும் ஓலே ராபின்சன் ட்வீட் செய்திருந்ததால், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தற்காலிக தடை விதிக்கப்பட்டது போல, லெஸ்பியன்ஸ்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ட்வீட் செய்திருப்பதாக கூறி, அவருக்கும் தடை விதிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருக்கும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவது குறித்தும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்