"அவுட் பண்ணா இப்டி தான் பண்ணுவீங்களா??.." மைதானத்தில் நடந்த சர்ச்சை.. மனம் வருந்தி மன்னிப்பு கோரிய CSK வீரர்.!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பதினைந்தாவது ஐபிஎல் தொடர், சமீபத்தில் முடிவடைந்திருந்த நிலையில், நடப்பு தொடரில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி, ஐபிஎல் கோப்பையை தட்டிச் சென்றிருந்தது.

Advertising
>
Advertising

Also Read | விமானத்தில்.. அடுத்தடுத்து மயங்கிய பயணிகள்.. நடுவானில் அரங்கேறிய பரபரப்பு.. பின்னணி என்ன??

இந்த ஐபிஎல் போட்டிகள் போலவே, தமிழ் நாட்டில் உள்ள வீரர்களை வைத்து, டிஎன்பிஎல் என்னும் தொடர் நடைபெற்று வருகிறது. தமிழ் நாட்டில் உள்ள வீரர்களை மொத்தம் எட்டு அணிகளாக பிரித்து இந்த போட்டிகள் நடைபெறும்.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய ஜெகதீசன், டிஎன்பிஎல் போட்டியில் செய்த செயல் ஒன்று, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்கட் முறையில் அவுட்..

TNPL தொடரின் முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதியது. இந்த போட்டியில், இலக்கை நோக்கி சேப்பாக் அணி ஆடிய போது, ஜெகதீசன் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். அப்போது, நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த ஜெகதீசனை மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார் பந்து வீச்சாளர் அபராஜித்.

நடுவிரல் காட்டிய ஜெகதீசன்

பந்து வீச்சாளர் பந்து வீச வரும்போது, நான் ஸ்ட்ரைக்கர் பேட்ஸ்மேன், கிரீசுக்கு வெளியே இருந்தால் அவரை மன்கட் முறையில் அவுட் செய்யலாம். இதனை மன்கட் அவுட் என்று அழைப்பார்கள். தான் மன்கட் முறையில் ஆட்டமிழந்ததால், முற்றிலும் ஏமாற்றமடைந்த ஜெகதீசன், அவுட்டாகி வெளியே செல்வதற்கு முன் மூன்று முறை தனது நடுவிரலை வீரரிடம் காட்டிக்கொண்டே சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகி அதிக அளவில் சர்ச்சையை உண்டு பண்ணி இருந்தது. சற்று அனுபவமுள்ள ஒரு இளம் வீரர், மைதானத்தில் அவுட்டாகி வெளியே வரும் போது இந்த மாதிரி செய்யலாமா என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிஎஸ்கே அணிக்காக ஆடி, அதன் மூலம் அதிகம் பிரபலம் அடைந்த ஜெகதீசன் செய்த இந்த செயல், கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அதேபோல அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

மன்னிப்பு கேட்ட ஜெகதீசன்

இந்நிலையில், மைதானத்தில் தனது செயல் குறித்து மன்னிப்பு கேட்டு இன்ஸ்டா பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார் ஜெகதீசன்.

அவரது பதிவில், "போட்டியின்போது மன்னிக்க முடியாத எனது நடத்தைக்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் எப்போதும் கிரிக்கெட்டிற்காகவே வாழ்கிறேன். ஆனால், எனது கோபம் காரணமாக அதனை நான் செய்யத் தவறி விட்டேன். நான் செய்த காரியத்திற்கு மன்னிப்பே கிடையாது. இதற்கு பிறகு நான் இன்னும் சிறப்பாக ஆட முயற்சிப்பேன். வருத்தத்துடன் ஜெகதீசன்" என குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Also Read | அய்யய்யோ.. வெளிச்சத்துல தூங்குனா இந்த பிரச்சினை எல்லாம் வரலாமா? அதிர வைத்த ஆராய்ச்சியாளர்கள்..!

CRICKET, JAGADEESAN, APOLOGIZE, JAGADEESAN APOLOGIZE, TNPL MATCH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்