"நம்ம வெச்ச 'குறி' எப்பவும் மிஸ் ஆகாது..." 'மின்னல்' வேகத்தில் செயல்பட்டு சொல்லி அடித்த 'ஜடேஜா'... இது வேற லெவல் 'சம்பவம்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்துள்ளது.

சுப்மன் கில் 50 ரன்களும், ரோஹித் ஷர்மா 26 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் தற்போது களத்தில் உள்ளனர். முன்னதாக, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் குவித்திருந்தது. அந்த அணியில் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 131 ரன்கள் எடுத்திருந்தார். கடைசி விக்கெட்டாக ஸ்டீவ் ஸ்மித் ஜடேஜா, மூலம் ரன் அவுட் செய்யப்பட்டார்.

ஃபீல்டிங்கில் பெயர் போன ஜடேஜா, மிக அற்புதமாக ஸ்மித்தை ரன் அவுட் செய்திருந்தார். லெக் சைடு அருகே பந்தை தட்டி விட்ட ஸ்மித், அந்த பந்தில் 2 ரன்கள் ஓட முடிவு செய்தார். அதன்படி முதல் ரன்னை மிக வேகமாக ஓடி எடுத்த நிலையில், அடுத்த ரன்னை ஸ்மித் ஓடுவதற்குள் மின்னல் வேகத்தில் பறந்து வந்த ஜடேஜா, நேரடியாக பந்தை ஸ்டம்பில் வீசி ஸ்மித்தை ரன் அவுட் செய்தார்.

 

மிக துல்லியமாக எந்தவித தவறும் இல்லாமல் ரன் அவுட் செய்த ஜடேஜாவுக்கு நெட்டிசன்கள் அதிக லைக்குகளை அளித்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியில் தற்போதுள்ள ஃபீல்டர்களில் மிகவும் சிறப்பான வீரர் ஜடேஜா என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்