'நட்புன்னா என்ன தெரியுமா? நண்பன்னா யார் தெரியுமா?'- விராட் ப்ரஸ் மீட்-க்குப் பின் வைரலாகும் ஜடேஜாவின் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

விராட் கோலி-யின் ப்ரஸ் மீட்-க்குப் பின்னர் ஜடேஜா, 'நட்பு, நண்பர்கள்' என பூடகமாக வெளியிட்டுள்ள ஒரு ட்வீட் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Advertising
>
Advertising

இந்திய அணி ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்பட்டதில் இருந்து பல சர்ச்சைகளும் புரளிகளும் எழுந்து வருகின்றன. பிசிசிஐ, ரோகித், கோலி என சர்ச்சைகள் நீண்ட தொடர் கதையாகி வருகின்றன. இந்த சூழலில் தான் தற்போது இந்திய அணியிலும் தன்னைச் சுற்றியும் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என வெளிப்படையாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

"ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் ஆக நான் தொடரவே விரும்பினேன். ஆனால், தேர்வாளர்கள் அது போல் நினைக்கவில்லை" என கோலி நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருந்தார். இந்திய அணியில் நிலவும் சர்ச்சைகள், கோலி கேப்டன்ஸி குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி சொல்வது ஒன்றாகவும் கோலி சொல்வது ஒன்றாகவும் இருக்கிறது.

இதனால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பிசிசிஐ, கங்குலி ஆகியோரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அப்படி கோலி-க்கும் கங்குலி-க்கும் என்ன பிரச்னைதான் நடக்கிறது? ஏன் கோலி-க்கு இவ்வளவு அவமரியாதை? என கிரிக்கெட் ரசிகர்களும் கோலி ரசிகர்களும் சமுக வலைதளங்களில் பொங்கி வருகின்றனர். கோலி நேற்று பல கருத்துகளை வெளிப்படையாக பேசிய பின்னர் பிசிசிஐ சார்பில் என்ன விளக்கங்கள் கொடுக்கப் போகிறார்கள் என்பது பிசிசிஐ-க்கே வெளிச்சம்.

இந்த சூழலில் விராட் கோலியின் நண்பரும் சக வீரருமான ரவீந்திர ஜடேஜா பதிவிட்டுள்ள ஒரு ட்வீட் வைரல் ஆகி வருகிறது. "போலியான நண்பர்கள் தான் புரளிகளை நம்புவார்கள். உண்மை நண்பர்கள் உங்களை நம்புவார்கள்" எனக் ட்வீட்டியுள்ளார். நிச்சயமாக இந்த ட்வீட் கோலி மற்றும் இந்திய அணியின் நிலையை பூடகமாகச் சொல்வதாக ரசிகர்கள் சமுக வலைதளங்களில் பேசி வருகின்றனர். மேலும், ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து நிரந்திர ஓய்வை அறிவிக்க உள்ளதாகவும் சில பேச்சுகள் எழுந்து வருகின்றன.

CRICKET, VIRAT KOHLI, KOHLI PRESS MEET, RAVINDRA JADEJA, விராட் கோலி, ஜடேஜா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்