"திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.." மாஸ் 'Entry' கொடுத்த 'ஜடேஜா'.. 'backgorund'ல கேட்ட 'தமிழ்' பாடல்!.. வேற லெவலில் வைரலாகும் 'வீடியோ'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர்கள் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தற்போது மும்பையில்  படு ஜோராக தயாராகி வருகிறது. இந்நிலையில், சென்னை அணியின்  ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது, காயமடைந்திருந்தார். இதன் காரணமாக, அடுத்து நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் ஜடேஜா இடம்பெறவில்லை.

காயத்தின் தீவிரம் அதிகமாக இருந்ததால், அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சென்னை அணி வீரர்களுடன் ஜடேஜா இணைந்ததால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். ஜடேஜா இணைந்த புகைப்படங்களை சென்னை அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து, மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ள ஜடேஜா, தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், பயிற்சிக்காக மைதானத்திற்குள் ஜடேஜா வரும் நிலையில், வீடியோவிற்கு பின்னால் ஓடும் பாடல் தான் நெட்டிசன்களிடையே அதிகம் ஹிட்டடித்துள்ளது.

 

நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த 'வாத்தி ரெய்டு' என்ற பாடலுடன் தான் மீண்டும் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை ஜடேஜா பதிவிட்டுள்ள நிலையில், இந்த வீடியோ அதிகம் வைரலாகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தங்களது முதல் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை ஏப்ரல் 10 ஆம் தேதியன்று எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்