அடக்கொடுமையே..! இப்டி ‘டிரெண்ட்’ ஆகும்னு அவரே நெனச்சு பாத்துருக்க மாட்டாரு.. கையை ‘பின்னாடி’ வச்சது ஒரு குத்தமா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.

அடக்கொடுமையே..! இப்டி ‘டிரெண்ட்’ ஆகும்னு அவரே நெனச்சு பாத்துருக்க மாட்டாரு.. கையை ‘பின்னாடி’ வச்சது ஒரு குத்தமா..!

ஐபிஎல் தொடரின் 49-வது லீக் போட்டி நேற்று (29.10.2020) துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக நிதிஷ் ரானா 87 ரன்கள் அடித்தார்.

Jadeja trending with India Cements after won the match against KKR

சென்னை அணியை பொருத்தவரை லுங்கி நிகிடி 2 விக்கெட்டுகளும், மிட்சல் சான்ட்னர், ஜடேஜா, கரன் ஷர்மா தலா 1 விக்கெட் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடியது.

Jadeja trending with India Cements after won the match against KKR

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இளம்வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 72 ரன்கள் அடித்து அசத்தினார். அடுத்து வந்த அம்பட்டி ராயுடு 38 ரன்களில் அவுட்டாக, கேப்டன் தோனி 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இக்கட்டான நிலையில் ஜோடி சேர்ந்த ஜடேஜா, சாம் குர்ரன் கூட்டணி அணியின் வெற்றி பொறுப்பை கையில் எடுத்தது.

கடைசி 2 பந்துகளில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. அப்போது களத்தில் நின்ற ஜடேஜா அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ஜடேஜா, அடுத்த 7 பந்துகளில் 28 ரன்கள் விளாசி தள்ளினார்.

இந்தநிலையில் கடைசி பாலில் சிக்ஸ் அடித்தவுடன், வெற்றியை கொண்டாடும் விதமாக தனது ஜெர்சியின் பின்னால் உள்ள தனது பெயரை கையால் காட்டினார். ஆனால் அவர் கை வைத்த இடம் சென்னை அணியின் ஸ்பான்சரான இந்தியா சிமெண்ட்ஸ்-ன் பெயர் இருந்தது. மேட்ச் வின்னரான ஜடேஜாவை தற்போது இந்தியா சிமெண்ட்ஸ் உடன் சேர்த்து நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்