IPL 2022: “நாங்க நல்லாதான் ஆரம்பிச்சோம்” “டி 20 போட்டியோட அழகே அதுதான்” – தோனி போல கூலாக பேசிய ஜடேஜா!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் 2022 சீசனில் ஜடேஜா தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | ‘மறுபடியும் முதல்ல இருந்தா..!’ சீன சுகாதார அதிகாரிகள் சொன்ன அதிர்ச்சி தகவல் என்ன..?!

இந்தியாவில் ஐபிஎல்….

15-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த மார்ச் 26-ம் தேதி துவங்கி நடைபெற்று வரும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். இதனை அடுத்து புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஜடேஜா தலைமையில் தொடர் தோல்வி…

இந்த சூழலில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக சென்னை அணி, ஐபிஎல் தொடரின் முதல் 4 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது. முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராகவும், இரண்டாவது போட்டியில் லக்னோ அணிக்கு எதிராகவும், மூன்றாவது போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராகவும் என வரிசையாக தோல்வி அடைந்தது. இதனால் புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே அணி பின்தங்கி மோசமான நிலையில் இருந்தது. பின்னர் ஆறுதலாக RCB அணியை வெற்றிப் பெற்று கணக்கைத் தொடங்கியது. இந்த மோசமான வெற்றிகளால் ஜடேஜாவின் கேப்டன்சி மீதும் விமர்சனங்கள் எழுந்தன.

குஜராத் டைட்டன்ஸ் நூலிழை வெற்றி…

இதன் பின்னர் அடுத்தடுத்து வெற்றிக்கணக்கை தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணி நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் மறுபடியும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சி எஸ் கே 5 விக்கெட்களை இழந்து 169 ரன்கள் சேர்த்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்தார். இதையடுத்து 170 ரன்கள் வெற்றி இலக்கோடு களமிறங்கியது குஜராத் டைட்டன்ஸ். இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக பந்துவீசிய சென்னை அணி கடைசி கட்டத்தில் கோட்டை விட்டது. சி எஸ் கே அணியின் பவுலர் ஜோர்டன் 3.5 ஓவர்களில் 58 ரன்கள் கொடுத்தது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. இதனால் கடைசி ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் மில்லர் 51 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகனார்.

தோல்விக்குப் பின் பேசிய ஜடேஜா…

இந்த ஐந்தாவது தோல்வியால் சென்னை அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு மங்கி வருகிறது. தோல்விக்குப் பின்னர் பேசிய கேப்டன் ஜடேஜா “நாங்கள் அற்புதமாக பந்துவீச்சைத் தொடங்கினோம், முதல் 6 ஓவர்களில் சிறப்பாகச் செயல்பட்டோம். நாங்கள் பேட்டிங் செய்யும் போது, விக்கெட் கடினமாக இருந்தது. பந்து இறுக்கமாக இருந்தது, ஆனால் கடைசி 5 ஓவர்களில் நாங்கள் எங்கள் திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. கிறிஸ் ஜோர்டன் தனது யார்க்கர்களை சிறப்பாக வீசுவார் என்று நான் நினைத்தேன். ஆனால் அவரால் அவ்வாறு செய்ய முடியவில்லை. டி20 கிரிக்கெட்டின் அழகு அதுதான்.” எனக் கூறி தோல்வியை பற்றி பேசினார். சி எஸ் கே அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் இதுபோல வெற்றியோ தோல்வியோ அதை இயல்பாக எடுத்துக் கொள்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read |  “இப்போ இந்த பொருளுக்கு தான் டிமாண்ட் ஜாஸ்தி”.. மணமகனுக்கு மறக்க முடியாத கிஃப்ட் கொடுத்த நண்பர்கள்..!

CRICKET, IPL, IPL 2022, JADEJA, T 20 MATCH, RAVINDRA JADEJA, ஐபிஎல், ரவீந்திர ஜடேஜா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்