‘முக்கிய விக்கெட்டை ரன் அவுட் செய்த ஜடேஜா’.. அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள் எடுத்து அசத்தல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறி வருகிறது.

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி நேற்று மான்செஸ்டர் மைதானத்தில் நடபெற்றது. போட்டியின் நடுவே மழை குறிக்கிட்டதால் பாதியிலேயே ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதனால் மீதி ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் 50 ஓவர்களின் முடிவில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 74 ரன்களும், கேன் வில்லியம்சன் 67 ரன்களும் எடுத்தனர். இப்போட்டியில் ஜடேஜா அடுத்தடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதில் ராஸ் டெய்லரை ரன் அவுட் செய்தும், டாம் லாதமை கேட்ச் பிடித்தும் அவுட்டாக்கினார்.

இந்நிலையில் 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மாவும், கே.எல்.ராகுலும் 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். அதனை அடுத்து வந்த விராட் கோலியும் 1 ரன்னில் அவுட்டாக 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இந்தியா பறிகொடுத்தது. இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்ட்யா கூட்டணி நிதானமாக விளையாடியது. இதில் ரிஷப் பண்ட் 32 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். இந்நிலையில் 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது.

ICCWORLDCUP2019, RAVINDRA JADEJA, VIRATKOHLI, SEMIFINAL1, INDVNZ, CWC19, TEAMINDIA, RUNOUT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்