‘பார்த்தாலே வெறலெவல்ல இருக்கே’!.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா அணியபோகும் ஜெர்சி.. ரசிகர்களுக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த பிசிசிஐ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி அணிந்து விளையாட உள்ள ஜெர்சியை ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் 18-ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளன. இப்போட்டியில் இந்தியாவும், நியூஸிலாந்து அணியும் மோதவுள்ளன. இதற்கான இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. வரும் ஜூன் 2-ம் தேதி இந்திய வீரர்கள் இங்கிலாந்து செல்ல உள்ளனர். அதற்கு முன்னதாக தற்போது அனைவரும் மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே ஐசிசி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஒருவேளை டிரா அல்லது டை ஆனால், சூப்பர் ஓவர் முறை நடைபெறாது என தெரிவித்தது. மேலும் இரு அணிகளுக்கும் சாம்பியன் பட்டம் பகிர்ந்தளிக்கப்படும் என தெரிவித்தது.

இந்த நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இந்திய அணி 90-களில் அணிந்து விளையாடிய ஜெர்சியைப்போல் தற்போது பயன்படுத்த உள்ளது. இந்த ஜெர்சியை அணிந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே ஒருநாள் தொடர்களில் ரெட்ரோ ஜெர்சியை பயன்படுத்திய நிலையில், தற்போது டெஸ்ட் தொடரிலும் இதேபோல் 90’ஸ் ரெட்ரோ டெஸ்ட் ஜெர்சியை இந்திய அணி பயன்படுத்த உள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்