IPL2022: மீண்டும் தோனியின் Captaincy… ஜடேஜா முடிவு சரியா..? - CSK எதிர்காலம் எப்படி இருக்கும்? - ரசிகர்கள் கருத்து

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஜடேஜா கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | CSK கேப்டனாக MS Dhoni மீண்டும் பதவியேற்பு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு - KGF meme போட்டு கொண்டாடும் ரசிகர்கள்.!

ஐபிஎல் 2022…

15-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த மார்ச் 26-ம் தேதி துவங்கி நடைபெற்று வரும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். இதனை அடுத்து புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார்.

CSK தொடர் தோல்வி…

இந்த சூழலில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக சென்னை அணி, ஐபிஎல் தொடரின் முதல் 4 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு சில போட்டிகளில் வெற்றி பெற்றாலும், தொடர்ந்து வெற்றியைத் தக்கவைக்க முடியவில்லை. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கீழ் வரிசையில் உள்ளது. இதனால் ஜடேஜாவின் கேப்டன்சி விமர்சனங்களை சந்தித்தது.

ஜடேஜாவின் அதிர்ச்சி முடிவு…

இதையடுத்து, ரவீந்திர ஜடேஜா CSK கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக CSK நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸை மீண்டும் வழிநடத்த எம்எஸ் தோனியிடம் கோரிக்கை விடுத்ததாகவும், ஜடேஜா தனது ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்த இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் தெரிவித்தது. ஜடேஜாவின் கோரிக்கையை அடுத்து தோனி சிஎஸ்கே வுக்கு தலைமையேற்க ஒப்புக்கொண்டார் என்றும் தெரிவித்திருந்தது. இதையடுத்து இன்று நடக்கும் போட்டியில் இருந்து தோனி தலைமையேற்பார் என தெரிகிறது. இன்னும் இருக்கும் 6 போட்டிகளில் ஆறிலும் வெற்றி பெற்றால் மட்டுமே CSK ப்ளே ஆஃப்க்கு செல்ல முடியும்.

CSK-வின் எதிர்காலம்…

இந்நிலையில் தோனி மீண்டும் கேப்டனானது குறித்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் நீண்டகால நோக்கில் இந்த முடிவு சரியானதா என்ற கேள்விகளையும் சிலர் எழுப்பி வருகின்றனர். ஏனென்றால் 40 வயதாகும் தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் CSK-வுக்காக விளையாடுவார் என்று தெரியவில்லை. தோனிக்கு பின்னர் CSK அணியில் அனுபவம் உள்ள வீரர் என்றால் அது ஜடேஜாதான். அதனால் அவருக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுத்திருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.  இது அணிக்குள் கவன சிதறலை ஏற்படுத்தலாம் என்று சிலர் கூறிவர, எப்படி ஆனாலும் தோனியின் கேப்டன்சிக்கு பிறகு அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் சில ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

CRICKET, IPL 2022, CSK, MS DHONI, JADEJA, JADEJA RESIGN CAPTAINCY CSK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்