பாசம் வைக்க..நேசம் வைக்க.. ரோஹித்தின் பட்டாசான செஞ்சுரி.. உடனே ஜடேஜா செஞ்சது தான்.. நெகிழ்ந்த ரசிகர்கள்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா சதமடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் ரோஹித் சதமடித்தபோது ஜடேஜா அவரை கட்டியணைத்து வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | சூப்பரான முயற்சி.. பாராட்டிய நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ.. இந்தியாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்த அசாம் முதல்வர்.. பின்னணி என்ன?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டி நாக்பூர் மைதானத்தில் ஆரம்பமாகி இருந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆடிய ஆஸ்திரேலியா அணி, 177 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகி இருந்தது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி பட்டையைக் கிளப்பியிருந்தார். இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸை துவங்கியது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான ராகுல் 20 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். ஆனாலும், மற்றொருபக்கம் நிலைத்து ஆடிய ரோஹித் சதமடித்து ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

நீண்ட நாட்களாக சதம் அடிக்காமல் இருந்து வந்த ரோஹித் ஷர்மா, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சதமடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் சதமடித்துள்ளார். அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் சதம் அடித்ததால் அவரது ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

அப்படி இருக்கையில் சிறப்பான சாதனை ஒன்றையும் ரோஹித் சர்மா தற்போது படைத்துள்ளார். அதாவது டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா வசமாக்கி உள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து ஆடும்போது ரோஹித் தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார். இதனை தொடர்ந்து தனது ஹெல்மெட்டை கழற்றி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ரோஹித். அப்போது எதிர்ப்பக்கம் நின்றிருந்த ஜடேஜா மகிழ்ச்சியுடன் வந்து ரோஹித் ஷர்மாவை கட்டியணைத்துக்கொண்டார். இந்த வீடியோ தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாக பரவி வருகிறது.

Also Read | "யாரையுமே லவ் பண்ண மாட்டேங்குறான்".. முரட்டு சிங்கிள் மகனை மனநல மருத்துவரிடம் அழைத்துப் போன அம்மா.. விநோத பின்னணி..!

CRICKET, JADEJA, ROHIT SHARMA, AUSTRALIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்