"இந்தியா 'டீம்'ல அந்த 'சான்ஸ்' ஒருத்தருக்கு மட்டும் தான் கெடைக்கும்னா.. அதுக்கு பொருத்தமான ஆளு 'ஜடேஜா' மட்டும் தான்.." 'முன்னாள்' வீரர் சொல்லும் 'காரணம்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ள நிலையில், இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில், ஜூன் மாதம் 18 ஆம் தேதி முதல் ஜூன் 22 ஆம் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.

டெஸ்ட் போட்டிகளில், அசுர பலம் வாய்ந்த இரு அணிகள் மோதவுள்ளதால், யார் வெற்றி பெறுவார்கள் என்பது பற்றி, பலரும் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்திய அணி சமீப காலமாக, வெளிநாட்டு மைதானங்களில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அது மட்டுமில்லாமல், இந்த தொடருக்காக, இந்திய வீரர்கள் 20 பேரின் பெயரை பிசிசிஐ அறிவித்திருந்தது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியைத் தொடர்ந்து, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் இந்திய அணி ஆடவுள்ளது.


இது இரண்டிற்கும் சேர்த்து, 20 வீரர்கள் வரை அணியில் இருப்பதால், எந்தெந்த வீரர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் களமிறங்குவார்கள் என்பதில் சற்று குழப்பமும் உள்ளது. இதற்காக, பல முன்னாள் வீரர்கள் எந்தெந்த வீரர்களை களமிறக்க வேண்டும் என்பது பற்றி, சில ஆலோசனைகளையும் இந்திய அணிக்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர் (Monty Panesar), டெஸ்ட் சாம்பியன்ஷிப் பற்றி பேசியுள்ளார். 'டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில், ஸ்பின்னர்கள் தான் முக்கிய பங்கு வகிப்பார்கள். இந்த போட்டிக்காக, ஐசிசி எப்படிப்பட்ட பிட்ச்சை உருவாக்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். ஏனென்றால், இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளுக்கு பசுமையான பிட்ச் தான் தயார் செய்யப்படும். ஆனால், இந்த போட்டிக்காக நடுநிலையான பிட்ச்சை தான் ஐசிசி தயார் செய்ய வேண்டும்' என பனேசர் தெரிவித்தார்.

தொடர்ந்து, இந்திய அணியிலுள்ள சுழற்பந்து  வீச்சாளர்கள் பற்றி பேசிய பனேசர், 'என்னைப் பொறுத்தவரையில், ஜடேஜா தான் இந்திய அணியின் 'எக்ஸ் ஃபேக்டர்'. ஐபிஎல் தொடர் முதலே அவர் பயங்கர ஃபார்மில் உள்ளார்.


இந்திய அணியில், ஒரே ஒரு ஸ்பின்னர் தான் ஆடப் போகிறார் என்றால், என்னுடைய தேர்வு நிச்சயம் ஜடேஜா தான். அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜாவை தான் எடுக்க வேண்டும் என நான் கூறுவேன். ஜடேஜாவின் டிஃபன்ஸிவ் மற்றும் இடதுகை பந்து வீச்சு என இரண்டும், இந்திய அணிக்கு அதிக பலம் சேர்க்கும்' என பனேசர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்