‘இப்போ அவரு செம ஃபிட்’!.. முதல் மேட்ச்லையே அவரை பார்ப்பீங்க.. வெளியான ‘சூப்பர்’ அப்டேட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவின் முதல் போட்டியிலேயே ஜடேஜா விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்குகிறது. இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதற்கு அடுத்த நாள் (ஏப்ரல் 10-ம் தேதி) மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதவுள்ளன. இதற்காக இரு அணிகளும் மும்பை சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

சென்னை அணியின் முதல் போட்டியிலேயே ஆல்ரவுண்டர் ஜடேஜா விளையாட வாய்ப்புள்ளதாக சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஜடேஜா, டெஸ்ட் தொடரின் போது கட்டை விரலில் ஏற்பட்ட காயத்தினால் அந்த தொடரிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த காயத்தினால் இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடும் வாய்ப்பையும் ஜடேஜா இழந்தார். இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்டுள்ள ஜடேஜா, ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணியில் இணைந்து பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்கு பேட்டியளித்த சிஎஸ்கே நிர்வாகி ஒருவர், ‘ஜடேஜா காயத்தில் இருந்து முழுவதுமாக மீண்டுவிட்டார். வலைப்பயிற்சியில் பவுலிங், பேட்டிங் என சிறப்பாக செயல்பட்டார். அதனால் டெல்லி அணியுடனான முதல் போட்டியில் ஜடேஜா நிச்சயம் இடம் பிடிப்பார்’ என கூறியுள்ளார். இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்