"இப்போ எல்லாருக்கும் 'ஐபிஎல்' தான் முக்கியம் போல?!.." கடுமையாக விமர்சித்த 'அப்ரிடி'!.. பரபரப்பை ஏற்படுத்திய 'ட்வீட்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், மறுபக்கம் தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, அங்கு கிரிக்கெட் போட்டிகளை ஆடி வருகிறது.

இதில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பாகிஸ்தான் அணி 2 - 1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது. அடுத்ததாக இரு அணிகளுக்கும் இடையேயான 4 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெறவுள்ளது.

முன்னதாக, நேற்று நடைபெறவிருந்த கடைசி ஒரு நாள் போட்டிக்கு முன்னதாக, தென்னாபிரிக்க அணி வீரர்களான டி காக், ரபாடா, லுங்கி நிகிடி உள்ளிட்ட வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வேண்டி, கடைசி ஒரு நாள் போட்டியில் பங்கேற்காமல், தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகத்தின் அனுமதியுடன் இந்தியா திரும்பினர். இதனால், மூன்றாவது ஒரு நாள் போட்டியில், பலம் குறைந்த அணியாக இருந்த தென்னாபிரிக்க அணியை, பாகிஸ்தான் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில், மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் அணியின் வெற்றி குறித்து ட்வீட் செய்த அந்த அணியின் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி (Shahid Afridi), பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்தார்.


தொடர்ந்து, தனது அடுத்த ட்வீட்டில், 'ஒரு தொடரின் பாதியில், தென்னாபிரிக்க வீரர்களை, அந்த அணியின் நிர்வாகம் ஐபிஎல் போட்டிகள் ஆட வேண்டி அனுப்பி வைத்துள்ளது ஆச்சரியமளிக்கிறது. இது போன்ற டி 20 லீக் தொடர்கள், சர்வதேச கிரிக்கெட் தொடர்களை பாதிப்பது, கவலையளிக்கிறது. இதுகுறித்து ஆலோசனை நடத்த வேண்டிய நேரம் வந்து விட்டது' என குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த ட்வீட் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் பலர், பல விதமான கமெண்ட்டுகளை இந்த பதிவின் கீழ் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்