'நீ உள்ள... நான் வெளிய'... 'டிரஸ்ஸிங் ரூம்ல வச்சு போட்ட ஸ்கெட்ச்'!.. சீக்ரெட்டை உடைத்த பென் ஸ்டோக்ஸ்!.. 'டார்கெட் பண்ணி தூக்கிட்டாங்களே'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற, அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் வகுத்த வியூகம் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி நேற்று நடந்த போட்டியில் தோல்வியைத் தழுவி 1-1 என சமநிலையில் உள்ளது. இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடக்க உள்ளது.
இதில் எந்த அணி வெற்றி பெறுமோ அந்த அணி ஒருநாள் தொடரில் கோப்பையை வெல்லும் என்ற நிலையில், இரு அணிகளும் தங்களை தீவிரமாக தயார் செய்து கொண்டுள்ளது.
நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 336 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடி இருந்தனர். இதில் கே எல் ராகுல் 102, ரிஷப் பண்ட் 77 மற்றும் விராட் கோலி 66 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடி இருக்கின்றனர்.
இதன்பிறகு 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 43.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 337 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்திருக்கிறது. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஜேசன் ராய் (55), பேர்ஸ்டோ (124) மற்றும் பென் ஸ்டோக்ஸ் (99) ஆகியோரின் அதிரடி ஆட்டம் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 1-1 என தொடரை சமநிலை செய்துள்ளது.
இந்நிலையில், நேற்றைய போட்டிக்கான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மிக சிறப்பாக செயல்பட்டு 52 பந்துகளுக்கு 99 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதில், இவர் 4 போர்களும்,10 சிக்ஸ்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் க்ருணால் பாண்டியாவின் பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்தார். இவர், முதல் 11 பந்துகளில் தனது 49 ரன்களை குவித்துள்ளார் என்பது ஆச்சரியமான ஒன்றாகும்.
இதுகுறித்து இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, டிரெஸ்ஸிங் ரூமில் நான், என்ன நடந்தாலும் நான் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களை பார்த்துக்கொள்கிறேன்,
எவ்வளவு பெரிய ரிஸ்க் ஆக இருந்தாலும் அதை நான் செய்கிறேன் என்று நான்தான் திட்டமிட்டேன். அதன்படி வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம் என்று தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "என்னங்க இது??.. ஒவ்வோரு மேட்சும் இப்டி பண்ணிட்டு இருக்கீங்க??.." மீண்டும் சர்ச்சையான 'நடுவர்' முடிவு.. "கூடவே இந்தியா டீம்'க்கு இன்னொரு தலைவலி வேற!!"
- 'கேட்கல... சத்தமா... இன்னும் சத்தமா'!.. 'இந்த ஆட்டம் போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா'!?.. ரவுண்டு கட்டி விளாசிய கேஎல் ராகுல்!.. பின்னணி 'இது' தான்!
- VIDEO: ‘விட்டா அடிச்சிருவாரு போல’!.. கடும் கோபமாக ஓடி வந்த ஹர்திக்.. போட்டியை பரபரப்பாக்கிய சம்பவம்..!
- ‘இதை எதிர்பார்க்கவே இல்ல’!.. டாஸ் போட்ட பின் கோலி சொன்ன பதில்.. கொதித்த நெட்டிசன்கள்..!
- 'ஓ... இதுக்கு பேரு தான் romantic look-ஆ'?.. இன்ஸ்டாவில் சஹால் செய்த சேட்டை!.. மனைவியிடம் சிக்கிய ரோகித்!.. 'மேடம்... பார்த்து செய்யுங்க'!!
- ‘உண்மையாவே அவர் எப்போ வருவார்னு தெரியல’!.. அப்படின்னா இந்த வருசம் அவரை பார்க்க முடியாதா..? சிஎஸ்கே ‘சிஇஓ’ சொன்ன முக்கிய தகவல்..!
- 'ஏன் சார்... டி20 போட்டிகள்ல நல்லா விளையாடல'?.. சரமாரியாக பாய்ந்த கேள்விகள்!.. 'இந்திய அணியின் உண்மை நிலை 'இது' தான்'!.. மௌனம் கலைத்த ராகுல்!
- 'இந்த வாட்டி 'கப்' RCBக்கு தான் போலயே'!.. கோலி ஓப்பனிங் முதல் ஐபிஎல் ஏலம் வரை... ஆர்சிபி-யின் மெகா ஸ்கெட்ச் 'இது' தான்!.. என்னங்க சொல்றீங்க!?
- 'சும்மா... வாய்க்கு வந்ததை பேசிட்டு இருக்காங்க'!.. "இது தாங்க பெஸ்ட் இந்திய அணி"!.. அதுவும் 'இவர்' இருக்காரு பாருங்க... புட்டு புட்டு வைத்த ஜாம்பவான்!
- 'அவரு' பவுலிங் போடுறப்போ எனக்கு அள்ளு விட்ரும்...! பந்த எடுத்திட்டு ஓடி வர்றப்போ ஒரு 'கெட்ட கனவ' பார்த்தது போல இருக்கும்...! - ஒளிவு மறைவில்லாம பேசிய இளம் வீரர்...!