‘இது யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்’!.. தீபக் சஹார் 8-வது வீரராக களமிறங்க காரணம் என்ன தெரியுமா..? பக்கா ‘ப்ளான்’ போட்டு அனுப்பிய டிராவிட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாரை 8-வது வீரராக ராகுல் டிராவிட் களமிறக்கியதற்கான சீக்ரெட்டை புவனேஷ்வர் குமார் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து விளையாடிய இந்திய அணி 49.1 ஓவர்களில் 277 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இந்திய அணியின் வெற்றி பெற முக்கிய காரணம், வேகப்பந்து வீச்சாளர்களான தீபக் சஹார் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோரது பொறுப்பான ஆட்டம்தான். இதில் 8-வது வீரராக களமிறங்கிய தீபக் சஹார் 82 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சர் விளாசி 69 ரன்கள் குவித்தார். இவருக்கு உறுதுணையாக இருந்த புவனேஸ்வர் குமார் 19 ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் கைகொடுத்தார்.

இந்நிலையில் இந்த போட்டியில் ராகுல் டிராவிட் எடுத்த முடிவு ஒன்றுதான் வெற்றிக்கு காரணமாக அமைந்ததாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர், ‘தீபக் சஹார் பேட்டிங்கில் ஓரளவுக்கு சிறப்பாக கை கொடுக்க கூடியவர் என்பதை முன்கூட்டியே டிராவிட் அறிந்து வைத்துள்ளார். இந்திய ஏ அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தபோது, அவரின் கீழ் தீபக் சஹார் விளையாடியுள்ளார். இதனால் தீபக் சஹாரின் பேட்டிங் திறமை குறித்து டிராவிட்டுக்கு முன்பே தெரிந்துள்ளது.

அதனால்தான் எனக்கு முன்னால் தீபக் சஹாரை பேட்டிங் செய்ய களமிறங்கினார். அவரின் இந்த முடிவு நாங்கள் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்துள்ளது’ என புவனேஸ்வர் குமார் கூறியுள்ளார். இப்போட்டியில் தீபக் சஹாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்